215
வரைவு கடாதல்

 
வளர்வதாகவும்     உள்ளுறையுவமங்    கொள்ளக்    கிடந்த   வாறு  காண்க.

    வளர்வதாகவும்   உள்ளுறையுவமங்   கொள்ளக்   கிடந்த  வாறு    காண்க.
(260)    
பாங்கி நின் பொருபிரிவுரை நீயவட்கென்றல்:
 வசையும் புகழுநின் மேலன வாந்தஞ்சை வாணன்வெற்பா
மிசையுங் கரும்பிபினல் வேம்புவைத் தாலன்ன வேட்கையெல்லாந்
திசையும் பரவுந் திருவனை யாள்தன் றிருவுளத்துக்
கிசையும் படிவல்லை யேற்சொல்லி நீபின் எழுந்தருளே.

     (இ-ள்.) தஞ்சைவாணன்    வெற்பனே!   வசை   வரினும்    புகழ்வரினும்
நின்பக்கலாம்; நின்  பொருள்  வேட்கை   நுகரும்  கரும்பிற் கைக்கும் வேம்பை வைத்தாலொக்கும்; எல்லாத்  திசையி லுள்ளோரும்  துதிக்குந்  திருவையொப்பாள்
தன் திருவுள்ளத்திற்குப்  பொருந்தும்படி  சொல்லவல்லையேல் சொல்லி,  நீ  பின் எழுந்தருள்வாயாக என்றவாறு.

     வசை - இகழ்ந்து  கூறப்படுஞ்   சொல். புகழ் - புகழ்ந்து  கூறப்படஞ் சொல்.
மிசைதல் - நுகர்தல். இசைதல் - பொருந்துதல்.
(261)    
நீடேனென் றவனீங்கல்:
   நீடேன்   என்று  அவன் நீங்கல் என்பது, தலைவன் நீட்டித் திராது  விரைந்து
வருவலென்று பாங்கியொடு கூறி நீங்குதல்.

 காலைப் பொழுது கடும்பரித் தேர்பண்ணிக் கானகம்போய்
மாலைப் பொழுது வருகுவல் யான் றஞ்சை வாணனன்னாட்
டாலைப் பழன மணிந்தவெம் மூர்நும் மகங்குளிரச்
சோலைப் பயில்குயில் போன்மொழி யாயென் றுணிவிதுவே.
     சோலையிடத்துப்   பழகுங்  குயில்போல்  மொழியாய்! கதிரோன்  உதிக்கும்
காலத்திற், கடுகிச்     செல்லும்    பரியையுடைய    தேரைப்   பண்ணமைத்துத்
தஞ்சைவாணன் நன்னாட்டிடத்துக்   கரும்பு   வளர்ந்தெழுந்த  வயல்சூழ்ந்த எம
்ஊர்க்கு,  கானகங் கடந்து   போய்,   நும்   அகங்குளிரக்   கதிரோன்  மறையும
மாலைக்காலத்தில் யான் வருகுவல், என் மனத்தின்கண் துணிவிது என்றவாறு.
     தேர்  பண்ணல் - தேர் செலுத்தற்கு உரியன வெல்லாம் அமையச் செய்தல்.
ஆலைப்பனாம் - கரும்புவயல். கடும்பரி - கடுகிச் செல்லும்