தஞ்சைவாணன் கோவை
216

 
   
பரி. `காலைப்பொழுது     கடும்பரித்   தேர்   பண்ணிக்   கானகம்     போய் மாலைப்பொழுதில் வருகுவல் யான்` எனில், `வரைவிடை வைத்துப்  பொருள்வயிற் பரிவொ, ரிருதுவின்
கண்ணுடைத்   தென்மனார்  புலவர்` என்னுஞ்  சூத்திரத்தொடு  மாறுகொள்ளுமே
யெனின் அற்றன்று;  காலைப்  பொழுதிற்  போய் மாலைப் பொழுதில் வருகுவன்
எனப் பாங்கி   கருதத்  தன்கருத்தில்  வருஞான்று மாலைப்பொழுதில் வருவதாய்
எண்ணித் தலைவன் கூறியவாறென்க.

    இக்கருத்தானேயன்றி,   தலைவன்  மீண்டு வருங்கால், `பாகனோடு சொல்லல்`
என்னும்   கிளவிச்   செய்யுளில்,   `சென்மாலையந்தி   கண்டால்தரி   யாளென்
திருந்திழையே` (தஞ். கோவை - 274) எனக் கூறியதூஉமெனக் கொள்க.
(262)    
பாங்கி தலைவிக் கவன்செலவுரைத்தல்:
  வில்லேய் குறும்பு மிறும்புமெவ் வாயும் விராயவெவ்வாய்க்
கல்லேய்கவலைக் கடங்கடந் தார்நமர் காய்ந்தெதிர்ந்தார்
செல்லேய் 1முரசச் செருவென்ற வாணன்தென் மாறையினின்
வல்லேய் முலைவிலை தான்தந்து நாளை மணம்பெறவே.
    (இ-ள்.) சினந்து   எதிர்ந்தார்   இடிக்கொப்பான பல்லியம் முழக்கும் போரை
வென்ற   வாணன் தென்மாறை நாட்டில் நினது வல்லுக் கொப்பான  முலைவிலை
தந்து   நாளை  மணம்  பெற  வேண்டுமென்பது  கருதி,  நம் அன்பர்,
 விற்கள்
சாத்தியிருக்கின்ற  குறும்பும்  சிறு  மலைகளும்  எவ்விடமுங் கலந்து,
 நடப்போர
கால்களை   யறுக்கும்   வெவ்விய   வாய்களையுடைய   கற்களும்
  பொருந்திய
கவர்வழியையுடைய காட்டைக் கடந்தார் என்றவாறு.

குறும்பு - பாலை நிலத்து  வேடரிக்கும் ஊர்.    இறும்பு - சிறுமலை.   கவலை -
கவர்வழி. கடம் - காடு. செல் - இடி. வல் - சூது.
(263)    
பூங்குழை யிரங்கல்:
பூங்குழை இரங்கல் என்பது, தலைமகளிரங்கல்.
 இப்பே ருவகை யினிப்பிரி யேனென்றும் என்முன்சொன்ன
அப்பே ருரைபழு தாமென்ன வேயர வஞ்சுமந்த
மைப்பேர் அலைகடல் வையகந் தாங்கிய வாணன்தஞ்சைச்
செப்பேர் இளங்கொங்கை மங்கைசெப் பாதன்பர் சென்றறதுவே.

1. `களிற்று` என்பதும் பாடம்.