217
வரைவிடைவைத்துகப் பொருள்வயிற்பிரிதல்

 
     (இ-ள்.)பாம்பு ஆயிரந் தலையாற் சுமக்கப்பட்ட நீலநிறப் பெரிய அலைகடல்
சூழ்ந்த புவிப்பாரத்தைத் தாங்கிய வாணனது தஞ்சையி லிருக்குங் கடைந்த செப்புப்
போன்ற இளங்கொங்கையையுடைய  நங்காய்!  அன்பர்   என்னுடன்  சொல்லாது
சென்றது   இயற்கைப்  புணர்ச்சியிற் கூடிய ஞான்று இப்பெரிய மகிழ்ச்சியை இனிப்
பிரியேனென்று  என்முன்   சொன்ன  அப் பெரியசொல் பிரிவலென்று சொல்லிற்
பழுதாமென்றோ என்றவாறு.
     இவ்வாறு தலைவனை அசதியாடுதல்போல், `கூறிய வுரையை மறந்தார்` என்று,
குறிப்புத்தோன்ற இரங்கிக் கூறினாளென்க. உவகை - மகிழ்ச்சி.உம்மை: அசைநிலை.
மங்கை: அண்மைவிளி.
(264)    
பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்:

     பாங்கி   கொடுஞ்சொல்   சொல்லல்   என்பது,   இவ்வாறு   நீயிரங்குவது
என்னையென்று கழறிக்கூறல்

 ஆரணத் தான்ருள் பாரளித் தானடங் காதவரை
வாரணத் தால்வென்ற வாணன்தென் மாறை வயங்கொளிசேர்
பூரணத் தார்மதி போன்முகத் தாயென் புலம்புதிநின்
காரணத் தாலல்ல வோபிரிந் தாரின்று காதலரே.
    (இ-ள்.)  பிரமனார்   உண்டாகிய   நிலவுலகத்தைக்   காத்துப்   பகைவரை
யானைப்படையால்   வென்ற   சந்திரவாணன்   தென்  மாறை நாடல் விளங்கிய
ஒளிசேர்ந்த   பூரணைத்   திதியினாலே   நிறைந்த மதிபோன்ற முகத்தாய்   ஏன்
புலம்புகின்றாய்;  நின்னை   மணம்புணர்    காரணத்தால்  அல்லவோ   காதலர்
இன்று பிரிந்தார் என்றவாறு.

    ஆரணத்தான் - பிரமன். பூரணை - பூரணைத்திதி.
(265)    
தலைவி கொடுஞ்சொற் சொல்லல்:
     தலைவி   கொடுஞ்சொல்    சொல்லல்    என்பது,   கழறிய   பாங்கியை
மனத்தினால்நொந்து கூறல்.
  மண்டுந் திரைவையை சூழ்தஞ்சை வாணற்கு வன்புலியும்
செண்டுங் கொடுத்தகல் செம்பியர் போலன்பர் சென்றுழீமுள்
இண்டுங் கழையும் பயிலும்வெங் கானியல் கேட்டுமிந்நோய்
கண்டுங் கலங்கல்செல்லாதிந்த பூரெற் கழறல்நன்றே.
     (இ-ள்.)   திரைநெருங்கும்   வைகை   சூழ்ந்த   தஞ்சைவாணனுக்கு வலிய
புலிக்கொடியையும்    செண்டாயுதத்தையும் கொடுத்தகலப் பட்ட  சோழரைப்போல
அன்பர், சென்றவிடத்தில் முள் பொருந்திய ஈகைச்