219
வரைவு கடாதல்

 
பருவங்கண்டு பெருமகள் புலம்பல்:

     பருவம்கண்டு  பெருமகள் புலம்பல் என்பது, தவைன் பிரியியுங்கால் கார்க்கு
முன்னே வருவலென்று குறிப்பாற் கூறிப் போயினனாகையால், கார்ப்பருவங் கண்டு
தலைமகள் புலம்பிக் கூறுதல்.

     குறிப்பாற்   கூறியது  எங்ஙனமெனின், `நீடேனென்றவன் நீங்கல்`  என்னும்
செய்யுளில்,   `மாலைப்பொழுது வருகுவல்யான்`   என்றது,   மாலைக்குரித்தாகிய
பொழுது   கார்காலமென்று  குறிப்பானறிவித்தா றுணர்க. அக்குறிப்பறிந்து  பாங்கி
தலைவிக்குக்   கூறயவதனால் தலைவி கார்கண்டு புலம்பினாள் என்பது. அன்றியும்
மேற்கிளவி   இகுளை  வம்பாகத்  தோன்றியது  தலைவன்  கூறிய கார்ப்பரவமன்
றெனப்  பொருள்  கொளக்கிடந்தது. இவை யாவும் குறிப்பாற் கூறிய தென்றுணர்க.

 மிகவும் பரந்த கரியகண் ணீர்செங்கை வெள்வளைபோல்
உகவுந் துறந்தவ ருன்னல ராலுறை கார்பொழிய
மகவுந் துணையுங் கலைதழு வுந்தஞ்சை வாணன்வெற்பின்
அகவும் பெடைமயி லுந்தமி யேனெங்ஙன் ஆற்றுவலே.

     (இ-ள்.)சிவந்த கையினிடத்துச் சங்கவளை புகுந்ததுபோல மிகவும்  விரிவாகிய
கரிய கண்ணினீர் துளித்துளியா யுதிரவும் துறந்த தலைவர் நினைந்திலர்; ஆதலால்
காரானது  துளிகளைப்  பெய்ய   மழைத்துன்பத்தாலஞ்சி மிகவும் துணையும் முசுக்
கலையைத்    தழுவும்   தஞ்சைவாணன்   வெற்பிற்   பெடைமயிலும்   அகவும்;
தனியாயிருக்கப்பட்ட யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன் என்றவாறு.

     `செங்கை வெள்வளைபோல் மிகவும் பரந்த`எனக் கூட்டுக உகுத்தல்-உதிர்தல்.
உன்னலர் - நினைந்திலர்.   உறை - துளி. கார் - முகில்.  துணை - பெண்குரங்கு.
கலை - முசுக்கலை.

 1`கலையென் காட்சி யுழைக்கு முரித்தே`
`நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்`
என்னும்    சூத்திரங்களால்   கலை    முசுவின்   ஆண்பெயரென்று   கொள்க.
பெடைமயில் என்புரி உம்மைத்தொகை.
(268)    

1. தொல், பொருள், மரபியல் - 45, 46.