கட
தஞ்சைவாணன் கோவை
220

 
இகுளை வம்பென்றல்:
இகுளை வம்பு என்றல் என்பது,  அவ்வாறு  புலம்பிய  தலைவி  தேறும்வண்ணம்
பாங்கி இது காலத்தின் வந்த மேகமன்று,  இடையே  வம்பாகத்  தோன்றியதென்று கூறியது. வம்பு - காலமல்லாத காலத்திற் றோன்றும் பொருள்.

  தனஞ்சேர்ந்த வஞ்சிநின் சாயல்கண் டஞ்சித் தனித்தனிபோய்
வனஞ்சேர்ந்த கயர்ந்த மயில்களெல் லாந்தஞ்சை வாணன்வெற்பில்
கனஞ்சேர்ந்த தலர்துளி காலுமுன் னேவம்பு காலுமென்னா
இனஞ்சேர்ந் தகவின நாந்தனி வாடி யிருத்தல்கண்டே.

    (இ-ள்.) திரண்ட தனத்தையுடைய வஞ்சி,  நினது  சாயலைக்  கண்டு  அஞ்சி
ஒன்றோடொன்று  கூடாமல்  தனித்தனியாய்ப் போய்க் காட்டிற் சேர்ந்து  அயர்ந்த
மயில்களெல்லாம்  தஞ்சை வாணன்  வெற்பிடத்துக் கார்காலம்  வந்து  மேகங்கள்
கூடிப் பருத்த துளிகளையும் முன்னே வம்பாக மழையைப் பெய்யு மென்றெண்ணி,
நாம் அன்பரைப் பிரிந்து  தனியாய்  வாடி  யிருத்தலைக்  கண்டு,  கூட்டங் கூடி அகவாநின்றன;  ஆதலால்,  இது  தலைவன்  கூறியகாலத்தில்  வருங்க  காரன்று
என்றவாறு.

    காரியத்தைக்    காரணமாக     உபசரிக்கப்பட்டது.        தனம் - முலை.
சேர்தல் - திரட்சி;  
1`சேரே திரட்சி`   என்னும்   உரிச்சொல்லியற் சூத்திரத்தானு
முணர்க.

    அயர்தல் - இளைத்தல்.  அலர்தல் - பருத்தல்.  2`தண்கம ழலரிறால்சிதைய`
என்னுந் திருமுருகாற்றுப்படையுட் கூறியதனானுணர்க.  அன்றியும்,
3`அலர்முலைப்
பாங்கி யருளியல் கிளத்தல்` என்னும் அகப்பொருட் சூத்திரத்தானு முணர்க.
(269)    
இறைமகள் மறுத்தல்:
    இறைமகள் மறுத்தல் என்பது, தலைவி பாங்கி  கூறியவதனை மறுத்துக் கூறல்.
  வாவித் தகையன்ன மேதஞ்சை வாணன் வரையகத்தென்
பாவித் தனிநெஞ்சு பார்த்தஞ்சு மேகண் பயின்றகண்ணார்
தூவித் தளைமயில் கோபங்கொள் ளாவரத் தோன்றியைச்சேர்ந்
தாவித் தகத்தள ரும்மணி காலு மராவென்னவே.

    (இ-ள்.) வாவியிலிருக்கும்  அழகு   பொருந்திய   அன்னம்     போல்வாய்!
தஞ்சைவாணன் வரையிடத்து என்கண் பார்த்துப் பாவித் தனிநெஞ்சு


1. தொல். சொல். உரியியல் - 67.
2. திருமுரு - 300. 3. இறையனார் அகப்பொருள் - 3.