கட
221
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்

 
அஞ்சாநிற்கும்;  நெருங்கிய  கண்களார்ந்த  சிறகாகிய  தலையையுடைய   மயில்
காந்தளை    அரிய    மணியை    யுமிழும்   நாகமெனச்   சினங்கொண்டுவர
அல்லாமையினால் காந்தளைச் சேர்ந்து பெருமூச்செறிந்தன; ஆதலால், வம்பன்று;
காலத்தில் வந்த கார் இஃது என்றவாறு.

     எனவே,   காந்தள்   மலருங்   காலம்   கார்காலமென்பது     தோன்றக்
கூறினாளென்க.   தகை - அழகு.   அன்னம் : ஆகுபெயர்.   `வரையகத்  தென்
கண்பார்த்து` என  வியையும்.   `கண் பார்த்து`  என்னும்     வினை   யெச்சம்
தன்வினையைக் கொண்டு முடியாது,  `நெஞ்சஞ்சும்` எனப் பிறவாற்றான் முடிந்தது.
என்னையெனின்,   1`உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய,  யாநிழற் றுஞ்சிய
செந்நாயேற்றை` என்றாற்போலுங் கொள்க.

தூவி - சிறகு. கோபம் - சினம். தோன்றி - காந்தள். ஆவித்தல் - பெருமூச்செறிதல்.
காந்தள் என்புழி இரண்டனுருபு தொகுத்தல். காலுதல் - உமிழ்தல்.
(270)    
அவர் தூதாகி வந்தடைந்ததிப் பொழுதெனத்
துணைவி சாற்றல்:
     அவர் தூதாகி வந்து  அடைந்தது  இப்பொழுது  எனத்  துணைவி  சாற்றல்
என்பது, தலைவி கார்காலம் வந்ததென்று  கூறியசொற் கேட்ட  பாங்கி,  தலைவன்
தான் வருகின்ற செய்தியை அறிவித்தற்கு விடுப்ப  இப்பொழுது  இக்கார்  தூதாய்
வந்து அடைந்ததென்று கூறல்.

  இன்னே வருவர்நின் காதல ரேதில ரேங்கவினிக்
கொன்னே யிரங்கி வருந்தல்கண் டாய்கொற்ற நேமிவிந்தை
மன்னே யெனவந்த வாணன்தென் மாறை வுரவுணர்த்த
முன்னே நடந்தன காண்கடுங் கால முகிலினமே.

     (இ-ள்.) அலர்தூற்றும்  அயலாரேங்க  நின்  காதலர்  இப்போதே  வருவர்;
இன்று   வீணேயிரங்கி  வருந்தலை;  வெற்றியாழியைப்  புனைந்த    சயமாதுக்கு
இறைவனென   வந்த  வாணன்  தென்மாறை  நாட்டில்  தலைவர்  வரவுணர்த்த
விரைவொடு கூடிய முகிலினம் முன்னே நடந்துவந்தன காண்பாயாக என்றவாறு.

     இன்னே - இப்போதே. ஏதிலர் - அயலார். கொன்னே - வீணே. கண்டாய்:
முன்னிலையசை. கொற்றநேமி விந்தை - சயமாது. மன் - இறைவன்.
முகிலினம் - முகிற்கூட்டம்.
(271)    

1. குறுந்தொகை - 232.