|
|
தலைமகளாற்றல்: |
| இன்புற்ற காதலத் திருவர்க்கு மொன்றுயி ரென்று சொன்னார் அன்புற்ற காதல ராதலி னாலகன் றாரெனநாம் துன்புற்ற காலத் தவருமு றாரல்லர் தோழிசொல்லும் வன்புற்ற காரளிக் குந்தஞ்சை வாணன்தென் மாறையிலே.
|
(இ-ள்.) கார்போற் கொடுக்குந் தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில் தோழிசொல்லுஞ் சொல்லும் வற்புறுத்தலைப் பொருந்திய; அன்றியும், அன்புற்ற காதலர் தாம் இன்புற்ற காலத்திருவர்க்கும் உயிரொன்றென்று சொன்னார்; ஆதலால், நம்மைப் பிரிந்தாரென்று நாம் துன்பமுற்ற காலத்து அவரும் வாராரல்லர் என்றவாறு. |
எனவே; வருவரென்பதாயிற்று. `அன்புற்ற காதல ரின்புற்ற காலத்து` எனவும், `உயிரொன்று` எனவும் மாறுக. உறாரல்லர் - வாராரல்லர். வற்புறுத்தல் - அற்றுவித்தலைப் பொருந்தல். காரளிக்கும் என்பது உவமத்தொகை.
|
அவனவட் புலம்பல்: |
அவன் அவண் புலம்பல் என்பது பொருளீட்டச் சென்ற தலைவன் தன் கருமமுற்றியபின்றையே அவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்பல். |
(272) |
| விழிகுழி யும்படி தேர்வழி பார்த்தெனை வீழ்ந்துவண்டு கொழுதிமி ருங்கழல் சோரக் கிடந்து குடங்கையின்மேல் ஒழுகிய அஞ்சன வெள்ளத் துணங்கு மணங்கைமுன்சென் றெழுகெனு நெஞ்சமென் னேயவ ரோவெளி லென்சொல்லுமே.
|
1(இது பிறசெய்யுட் கவி) |
(273) |
இத்துணையும் பதினாறாநாள் செய்தியென் றுணர்க. பதினாறாம் நாள்: |
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன்
|
ஐம்பத்தொன்றாம் நாள்: |
மீண்டு வந்தமையால் முப்பத்துநான்கு நாள் இடைப்பட்டதென உணர்க. |
|
1. அம்பிகாபதிகோவை - 319. |