|
|
மீண்டுவருங்காலைப் பாகனொடு சொல்லல்: |
| வன்மா முடுக வலவதிண் தேரினி வாணன்றஞ்சைக் கென்மா லுறுநெஞ்சின் முசெல நாகிள வேறுபுல்லிப் பொன்மா மணியும் பிரிந்திருந் தாரும் புலம்பமன்றில் சென்மாலை அந்திகண் டாற்றரி யாளென் திருந்திழையே.
|
(இ-ள்.) கழுத்திற்கட்டிய இரும்பிற்செய்த பெரிய மணியும் கணவரைப் பிரிந்த மாதரும் புலம்புறப் பசுவானது மழ விடையைச் சேர்ந்து மன்றத்திற் செல்லும் மாலையாகிய அந்திக் காலத்தைக் கண்டால், என் திருந்திழை ஆற்றாள்; ஆதலால், பாகனே! வாணன் தஞ்சையூர்க்கு என் ஆசை கொண்ட நெஞ்சு செல்வதற்கு முன்னே, இன்று திண்ணிய தேர்செல்லத் தேரிற் பூட்டிய வலிய குதிரைகளை முடுகச் செய் என்றவாறு. |
வல்-வலிமை; விரைவுமாம். மா-குதிரை. `முடுகச்செய்` என்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கது. வலவன் - தேர்ப் பாகன்: அண்மை விளி. ஏறு - விடை. 1`எருமையு மரையும் பெற்றமுமன்ன` என்னும் மரபியற் சூத்திரவிதியானும் உணர்க. பொன் - இரும்பு;
|
| 2`வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன்மீன்விழுங்கி யற்று` |
என்றார் பிறரும்.
|
| `தங்கையார் தாங்குங் கானப் பெருங்கவலை யெங்கு மறவோ ரிரைத்தெழுந்தார் - தங்களைக்கண் டென்றுகாண் வேட்கை மடிசுரப்புத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிர்மின் கண்டு` |
என்றார் பிறரும். |
மாலையந்தி, மீமிசை என்பதுபோல் நின்றது. திருந்திழை: அன்மொழித்தொகை. |
(274) |
மேகத்தொடு சொல்லல்: |
மேகத்தொடு சொல்லல் என்பது, தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிச் சொல்லல். |
| வேண்டும் பொருளைத் தரும்பொருட் போய்முற்றி மீண்டவென்றேர் தூண்டும் பரிமுன் துனைமுகில் காள்சென்று சொல்லுஇந்து தீண்டுங் கொடிமதில் சூழ்தஞ்சை வாணனைச் சேரலர்போல் ஈண்டும் பசலைமெய் போர்த்திருப் பார்தமக் கென்வரவே. |
|
1. தொல். பொருள். மரபியல் - 39. 2. குறள். சூது - 1. |