|
|
வலம்புரி சிழத்தி வாழ்த்தல்: |
| மால்வண் டெனமன்னி வாணன்தென்மாறைமன் னன்புகழே போல்வண் டமிழ்மன்னர் போற்ற விளங்குக பொன்கொழிக்குங் கால்வண்டல் வையைக் கரைமல்கு மல்லிகைக் கான்முகையின் மேல்வண்டிருந்தது போற்க்ரு மாமுக வெண்சங்கமே.
|
(இ-ள்.) பொன்கொழிக்கும் வண்டல்பரந்த வாய்க்கால் பொருந்திய வையையாற்றங்கரையில் நிறையும் மல்லிகையினது காம்பொடியக்கூடிய முகையின்மேல் வண்டிருந்ததுபோலக் கரிய முகத்தொடு கூடிய பெரிய வெண்சங்கமானது திருமால் கைச்சங்கே போல என்றும் அழியாமையாய் நிலைபெற்ற வண்மைபொருந்திய தமிழ்வேந்தராலே போற்ற நின்ற வாணனாகிய தென்மாறைநாட்டு மன்னன் புகழ்போல் வண்தமிழ் மன்னர் துதிக்க விளங்குக என்றவாறு. |
கால் - வாய்க்கால். வண்டல் - திரைபுரண்டு இருகரையும் பரப்பிய மண். மல்கதல் - நிறைதல். காம்புமுகத்து மெழுகு அமைத்தலால் கருமுகம் என்றது. மா - பெருமை, `கருமுக மா வெண்சங்கம்` என கூட்டுக. |
(277) |
தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாவல்: |
தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தனை வினாவல் என்பது, வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் பிரிந்த முப்பத்தைந்தாநாள் வந்தானென்று நாள் வரையறை கூறியது என்னையெனின்,
|
| `களவொழுக்கமிருதிங்கள்` |
என்று வரையறை கூறினமையாலும்,
|
| 1"களவினுட டவிர்ச்சி வரைவி னீட்டம் திங்கள ளிரண்டி னகமென மொழிப"
|
என்ற இறையனா ரகப்பொருளுரையில், `திங்களிரண்டினகம்` என்பதற்குத் திங்கள் இரண்டின்கண் என்றும், ஐந்து நாள் ஆறுநாள் அவர்வரைவு முடியும் என்றும் கூறினாராகலானும், `ஒரு வழித்தணத்தல்` என்பதுவரைக்கும் இவ்வுரையில் பதினைந்து நாளென்று கூறதலானும், வரைவியல் ஆறாம்நாள் மணமுடிந்ததாகக் கூறுதலானும், ஆக ஐம்பத்தாறாம் நாளென்று வரையறையாய் நிற்றலின், ஈண்டு முப்பத்தைந்தாநாள் என்று வரையறை கூறியதெனக் கொள்க. |
|
1. இறையனார் அகப்பொருள் - 32. |