|
|
| 1"வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் இருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்" |
என்னுஞ் சூத்திரவிதியின், இருதிங்கள் சென்றதென்று கூறாது முப்பத்தைந்து நாள் சென்றதென்று கூறியது. என்னையெனின், இரு திங்கள் சென்று வருவதல்லது இதற்குள்ளாக வருவது அன்றென இலக்கணங் கூறிற்றிலர்; இருதுவின் கண்ணுடைத்து எனக் கூறுதலான், இவ்விருதுவிடை எவ்வளவு வரையறைப் பட்டதோ அவ்வளவே இலக்கமெனக் கொள்க. |
வாளிரண்டு மாறுவைத்தபோல் மழைக்கண் மாதரார்` எனப் பிறரும், `மாறு` எதிராகக் கூறியவாறு உணர்க. |
அன்றி, இருதிங்கள் சென்று வந்தானெனின், களவொழுக்கம் மூன்று திங்களாம்; ஆகவே, இலக்கணவழுவாய் அகப்பொருள் சிதைவாமெனக் கொள்க. |
| நினையீர் பொருட்குப் பிரிந்தய னாட்டுழி நின்றுழிவேள் அனையீர் நினைந்து மறிதிர்கொல் லோவஞ்சொ லாலறிவோர் வனையீ ரிதழ்க்கண்ணி வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல் நனையீ ரிதழ்க்கண்வை காவெவ்வ நோயுற்ற நவ்வியையே. |
(இ-ள்.) வேள் அனையீர், அழகிய சொல்லாலே புலவர் புனையப்பட்ட சொல் ஓரிதழும் பொருள் ஓரிதழுமாகிய தமிழ் மாலையையுடைய வாணன் தென்மாறையை வாழ்த்தாதவர் போல், நீரால் நனைந்த இரண்டி தழையுடைய கண்ணுறங்காத துன்பந் தரப்பட்ட வேட்கை நோயையுற்ற மான்போன்றவளை நினையீர்; அப்பொருள் காரணமாகப் பிரிந்து அயனாட் டிடத்துத் தங்குமிடத்தில் நீர் நினைந்தும் அறிதிரோ என்றவாறு. |
பகல்வருவானை இரவுவருகென்றல்: |
| நினையீர் பொருட்குப் பிரிந்தய னாட்டுழி நின்றுழிவேள் அனையீர் நினைந்து மறிதிர்கொல் லோவஞ்சொ லாலறிவோர் வனையீ ரிதழ்க்கண்ணி வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல் நனையீ ரிதழ்க்கண்வை காவெவ்வ நோயுற்ற நவ்வியையே. |
அறிவோர் - புலவர். வனைதல் - புனைதல். கண்ணி - தமிழ் மாலை. வைகுதல் - தங்குதல்; கண்ணுக்குத் தங்குதல் இமைத்தல்; தங்காதது - இமையாதது. எவ்வம் - துன்பம். நோய் - வேட்கை; நவ்வி - மான்; இவ்விரண்டும் ஆகுபெயர். |
(278) |

தலைவனினைத்தமை செப்பல்: |
| கானெடுங் குன்றங் கடந்துசென் றேனொரு காலுமைதோய் மானெடுங் கண்ணி மறந்தறி யேன்வண்கை வாணன்தஞ்சை நீனெடும் பெண்ணைச் சுரும்பையுஞ் சூது நெருங்குகொங்கைத் தேனெடுங் கண்ணிமென் பூங்குழன் மாதர் திருமுகமே. |
(இ-ள்.) மைதோய்ந்து மான்போன்ற நெடிய கண்ணையுடையாய், வளவிய கையினையுடைய வாணன் தஞ்சை நகரின்கண் நீலநிறமாகிய நெடிய பனையினது கரும்பையும் சூதும், ஒப்ப நெருங்குங் கொங்கையையும், வண்டு |
|
1. அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - 40. |