|
|
உறையும் நெடிய மாலையணிந்த மெல்லிய பொலிவினையுடைய கூந்தலையும், மாதர் அழகிய முகத்தையும், காடும் நெடிய குன்றும் கடந்து சென்றேனாகிய யான ் ஒருகாலும் மறந்தறியேன் என்றவாறு.
|
எனவே, மறந்திலனாதலால் நினைந்திலன் என்று கூறிய வாறாயிற்று.
|
| 1`உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்`
|
என்பதனானுணர்க. |
`கானெடுங்குன்றம்` என்புழி உம்மைத்தொகை. நீலம் நீல் எனக் கடைக்குறை; `நீனிற வண்ணன்` என்புழிப்போல.
|
பெண்ணை - பனை. சூது - வல். தேன் - வண்டு. |
(279) |
ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல்: |
ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல் என்பது, பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவற்குக் கூறல்.
|
| உயரா மலகத் தருங்கனி நீர்நசைக் குண்சுரம்போய் வியராமல் இல்லின் விடுத்தகன் றாளைமென் பூஞ்சிலம்பா அயராமல் அஞ்சலென் றாற்றுவித் தேனிவ் வவனியெல்லாம் மயராமல் வந்த பிரான் றஞ்சை வாணன்தென் மாறையிலே.
|
(இ-ள்.) இப்புவியெல்லாம் மயங்காமல் வந்த பிரானாகிய தஞ்சைவாணனது தென்மாறை நாட்டின் மெல்லிய பூமலிந்த சிலம்பனே! உயர்ந்த நெல்லியின் அரிய கனியை நீர்வேட்கைக்கு உண்ணப்பட்ட சுரத்திடை உடன்போய் வியர்வடையாமல் இல்லின்கண் விடுத்து நீர் பிரிந்தவளை இளையாமல் அஞ்சலென்று ஆற்றுவித்தேன் என்றவாறு. |
ஆமலகம் - நெல்லிக்கனி. அருங்கனி - மழையின்றி அங்கங்கு ஒவ்வொன்றா யிருக்குங் கனி. நீர்நசை - நீர்வேட்கை. வியராமல் - வியர்வடையாமல். அயராமல் - இளையாமல். மயராமல் - மயங்காமல்.
|
`என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல்` என்பது பிரிவறிவுறுத்தற்கு உரியது. |
`பாங்கி நின்பொருட் பிரிவரை நீ யவர் கென்றல்` என்பது பிரிவுடன் படாமைக்கு உரித்து;
|
|
1. குறள். காதற்சிறப்புரைத்தல் - 5. |