கட
231
வரைவுமலிவு

 
(இ-ள்.) குளத்திற் றாமரை மலரென்னுங் கண்ணியை  வண்டென்னுங்  காளை  பல
புள்ளினோசையே முரசமாக மணம் புணரப்பட்ட குளிர்ந்த துறையையுடைய நாடர்,
எதிர்ந்த பகைவர்மேல் யானையைச்  செலுத்திய  வாணன்  தென்மாறை  நாட்டில்
வருகுவராகில்,  அவரது  நன்மணக்  கோலத்தைக்   கண்டு   நம்மினும   யாயும்
இன்புறும் என்றவாறு.

     மாமலர் - திருவிருக்குமலர்.  `கயமாமலரெனுங்  கண்ணியை   வண்டெனுங்
காளை  பல்புள்,  இயமா  மணம்புண  ரீர்ந்துறை  நாடர்` என்றதனால்,  குலமே
குளமாகவும்,  குளத்திற் பூத்த தாமரைப்பூ தலைவியாகவும்,  தாமரைமலர்  மணம்
உண்ண  வரும்  வண்டு  தலைவனாகவும்,  பல  புள்ளியமே   வாத்தியமாகவும்
உள்ளுறையுவமந்  தோன்றியதெனின்,  இவ்வாறு   தலைவன்   மண  முடியாமல்
உடன்போக்க  நிகழ்தலான்  இறைச்சிப்  பொருளென்ற  கொள்க.  இயம் - ஓசை.
ஈர்ந்துறை - குளிர்ந்த   துறை; `ஈர்ங்கை விதிரார்`  என்றார்  போலக்   கொள்க.
வயமா - யானை. மணவணி - மணக்கோலம். உம்மை : சிறப்பு.
(282)    
பாங்கி தமர்வரைவெதிர்ந்தம்மை தலைவிக்குணர்த்தல்:

     பாங்கி தமர்வரைவு  எதிர்ந்தமை  தலைவிக்கு உணர்த்தல் என்பது; பாங்கி
தலைவன்  றமர்  மணங்கூறி   வந்துழித்   தலைவி   தமர்மணம்   எதிர்ந்தமை
தலைமகட்குக் கூறல். 

  மணிப்பா லிகைமுத்தம் வைத்தாங் கடம்பலர் வார்திரைதூய்
அணிப்பாய் துவலை யரும்புந் துறைவர்க் கணியெதிர்ந்து
பணிப்பா சிழையல்குல் வெண்ணகை யாய்நமர் பாரநின்னோய்
தணிப்பான் முரசறைந் தார்தஞ்சை வாணன் தமிழநிலத்தே.

     (இ-ள்.) பசிய  பொன்னாற்செய்த  மேகலையணிந்த பாம்பின் படம் போலும்
அல்குலையும் வெள்ளிய நகையையும் உடையாய்! தஞ்சைவாணன்  தமிழ்நிலத்தின்
மணிப்பாலிகையின்   முத்தம்  வைத்தாற்போல  அடம்பமலரில்   நெடிய  திரை
தூவப்பட்ட நிரையாய்ப் பரந்த திவலை தோன்றுந்  துறைவர்  தமக்கு  அணியால்
நமர் மணமெதிர்ந்து பாரநின் வேட்கைநோய் தணிக்கும் பொருட்டு முரசறைந்தார்;
அம்முரசொலி கேட்பாயாக என்றவாறு.

     ஆங்கு : உவம உருபு;

      1`பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு`

என்புழிப்போல. வார்திரை - நெடிய திரை. தூய் - தூவி.

      2`உருவப் பல்பூத் தூஉய் வெருவர`

1. திருமுரு - 2. 2. திருமுரு - 241.