கட
தஞ்சைவாணன் கோவை
232

 
என்புழிப்போல. துவலை - திவலை.  அணியெதிர்ந்து  என்புழி  ஆல் நமர் என
வருவிக்க. பணி - பாம்பு. நோய் - வேட்கை. எஞ்ஞான்றும்  மணச்சடங்க  போற்
றோன்றும்  துறைவராதலால்  இங்குவரவே  மணச்சடங்கு   உண்டாம்   என்பது
தோன்றி நின்றது.
(283)    
தலைமகளுவகையாற்ற துளத்தொடு கிளத்தல்:
தலைமகள்  உவகையாற்றாது  உளத்தொடு  கிளத்தல் என்பது தலைவி  மகிழ்ச்சி
யடங்காது நெஞ்சொடு கூறல்.

  சோகா குலமெய்தல் காண்டுநெஞ் சேநந் துறைவரெனும்
நிகா னுடன்பள்ளி நீள்வங்க மேறி நிலம்புரக்கும்
மாகா விரியன்ன வாணன்தென் மாறைமன் னன்பகையும்
ஏகா விருட்கங்கு லாங்கடற் காலை யெனுங்கரையே.

    (இ-ள்.) நெஞ்சே! நம்முடைய துறைவரென்னும்  மீகாமனுடன்  படுக்கையாகிய
மரக்கலமேறி,  நிலத்தைக்   காக்கும்  பெரிய  காவிரிக்கொப்பாகிய
 வாணனாகிய
தென்மாறை  மன்னனுக்குப்  பகையாகினாரும்  ஏகுதற்கரிய
 இருண்ட  கங்குலாங்
கடலைக்   கடந்து    காலையென்னுங்  கரையைக்   காண்குதும்; ஆதலால்,  நீ
சோகத்தால் ஆகுலமெய்தலை என்றவாறு.

சுப்பிரயோகம்,  விப்பிரயோகம்,  சோகம்,  மோகம்,  மரணம்  என்னும்   மாரன்
அம்பால்  வரும்  அவத்தை  ஐந்தனுள்,  `சோகம்`  அசோக  பாணத்தால் வரும்
அவத்தையென்றுணர்க.        ஆகுலம் - துன்பம்.    காண்டும்: எதிர்காலமுற்று
வினைச்சொல்.  நீகான் - மீகாமன்.   பள்ளி - படுக்கை.    வங்கம் - மரக்கலம்.
புரத்தல் - காத்தல்.  காலை - விடியற்காலம்.  பகையும் என்புழி  உம்மை இழிவு
சிறப்பு. இதனுள் இயைபுருவகம் வந்தவாறு காண்க.
(284)    
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்:
  மாரியஞ் சுங்கொடை வாணன்தென் மாறையில் வாழிவண்டார்
வேரியந் தொங்கல் விரைகமழ் மார்ப விடாதவம்பல்
சேரியம பொய்கைத் துறையலர் வாடநின் செவிவமணம்
தூரியஞ் சங்கதி ரக்காட்டு நீயன்று சூட்டலரே.

     (இ-ள்.) வண்டு  உண்ணுங்  கள்  பொருந்திய  மாலை   மணங்   கமழும்
மார்பனே,  மறந்துவிடாத  அம்பலையுடைய  சேரியாகிய  பொய்கைத் துறையிலே
தோன்றிய  அலர்  வாடநின்  அழகாகிய  மணக்கோலத்தால்  அன்று   சூட்டின
அலரை  இன்று  பலருமறியத்  தூரியமும் சங்கும் அதிர நீ சூட்டிக்காட்டு; முகில்
அஞ்சுங்  கொடையையுடைய  வாணன்  தென்மாறை   நாட்டில்   நெடுங்காலம்
வாழ்வாயாக என்றவாறு.