|
|
நாட்டில் என்னுயிர்போன்ற தையலே! நீ உளங் குழைந்து கலுழக் காரணம் என்னை, நுண்மணலார்ந்த திரைவந்து உன் வண்டலம்பாவை யழித்தனவோ, ஒருகாலுஞ் சினவாத அன்னை சினந்தனளோ, யான் அறியக் கூறுவாயாக என்றவாறு.
|
அயிர் - நுண்மணல். வண்டலம்பாவை - மண்ணாற்செய்த பாவை. செயிர்த்தல் - சினத்தல். வயிர் - போர்க்களத்தில் ஒலிக்கும் கொம்பு. நரலுதல் - ஒலித்தல். கலுழ்தல் - அழுதல். என் - யாது காரணம். இதனுள், `கூறுவாயாக` என்பது சொல்லெச்சமாக் நின்றது. |
(228) |
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க. |
தலைமகள் கலுழ்தற்காரணங் கூறல்: |
| தாரணி கொண்ட விருதோ ளொருவர் தனித்துழியென் வாரணி கொங்கை மணத்துசென் றார்தஞ்சை வாணனென்னார் தேரணி வென்ற செழும்புகர் வேல்விழித் தேனினஞ்சூழ் காரணி மென்குழ லாயது வேகலுழ் காரணமே |
(இ-ள்.) தாரை அழகாக்கொண்ட இருதோளையுடைய ஒருவர் தனித்தவிடத்து என் வாரணிந்த கொங்கையைக் கூடிச் சென்றார்; தஞ்சைவாணன் ஒன்னாரது தேர்நிரையை வென்ற செழுமையாகிய இரத்தக்கறை நிறத்தையுடைய வேல்போன்ற விழியையும் வண்டினஞ் சூழ்ந்த மேகத்தின் அழகைக்கொண்ட மெல்லிய குழலையும் உடையாய்! யான் அழுங் காரணம் அது என்றவாறு. |
தார் - மாலை. வார் - கச்சு. ரேணி - தேர்நிரை. புகர் - உதிரக் கறை. கார். மேகம். அணி - அழகு. |
(289) |
தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை யெய்தக் கூறல்: |
தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை எய்தக் கூறல் என்பது, தலைவன் தெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல, மெய்யென்ற தெளிந்து அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறல். |
| துதித்தே னணங்கொடு சூளுமுற றேனென்ற சொல்லைமெய்யா மதிந்தே னயர்ந்து மதியிலி யேன்தஞ்சை வாணன்வையை நதித்தே னினம்புணர் மாதர்கண் போல நகைக்கு நெய்தல் பொதித்தே னுகர்ந்தக லுங்கழிக் கானற் புலம்பர்வந்தே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வையைநதியிலே குலாவப்பட்ட வண்டினம் மடவார்கண்போல் ஒளிவிடும் நெய்தற் பூவினிடத்துப் பொதிந்த தேனை நுகர்ந்து பிரிந்து போய் கழிக்கரைச் சோலையையுடைய புலம்பர் வந்து |