|
|
துதித்துத் தெய்வத்துடனே சூளையும் உற்றேன் என்ற அவர் சொன்ன சொல்லை மெய்யாய் மதியிலியாகிய யான் மறந்து மதித்தேன் என்றவாறு.
|
சூள் - ஆணைகூறல். உயர்ந்து - மறந்து. தேனினம் - வண்டினம். நகை - ஒளி. பொதிதல் - நிறைதல். வண்டினம் தலைவனாகவும், நெய்தற்பூ தானாகவும், தேன் தன்னிடத இன்பமாகவும், அவ்வண்டு தேன்நுகர்ந்து நீங்கியது போலத் தலைவன் தன்னிடத்து இன்பம் நுகர்ந்து பிரிந்து போயினான் என்னும் உள்ளுறையுவமம் கொள்ளக் கிடந்தது. இவ்வாறு தெய்வத்தொடு சூளும் உற்றேன் என்று சொல்லியது எக்கிளவிப் பொருள் எனின், வன்புறையில், `பிரியேன்` என்னும் கிளிவியலென்று உணர்க ஆணைகூறல் அக்கிளவிச் செய்யுளில் இல்லையாலெனின் `பிரியேன்` என்றது வேறொரு கிளவியிலும் இல்லையாதலால் அதுவே பொருள் என்று உணர்க. |
(290) |
இறைவி தலைவன் இகந்தமை இயம்பல்: |
இறைவி தலைவன் இகந்தமை இயம்பல் என்பது, இறைவி தலைவன் நீங்கினமை கூறல். |
| வரியோல் வண்டலை தண்டலை சூழ்தஞ்சை வாணன்வண்மைக் குரியோ னுயர்வையை யொண்டுறை வாயுர வோர்தெளித்தும் கரியோர் பிறரில்லை யென்றகன் றாரினிக் காரிகையாய் பெரியோர் மொழிபிற ழாரென்று தேறுதல் பேதைமையே.
|
(இ-ள்.) காரிகையாய்! பண்ணையொலிக்கப்பட்ட வண்டுகள் செலவும் வரவுமாய் அலையப்பட்ட சோலைசூழ்ந்த தஞ்சை வாணனாகிய கொடைக்க உரியோனுடைய உயர்ந்த வையை யாற்றின் ஒள்ளிய துறையிடத்தில் உரவோர் தெய்வ முன்னாகத் தெளியச் செய்தும் கரியோர் பிறிதொரு வருமில்லையென்று நம்மைப் பிரிந்து போயினார்; ஆதலால், இனிப் பெரியோர் சொல்லிய சொல் தப்பார் என்று தெளிவது பேதைமை என்றவாறு. |
வரி - பண். ஓலம் - ஆரவாரித்தல். தண்டலை - சோலை. உரவோர் - அறிவோர். தெளித்தல் - தெய்வத்தின் முன்னாகத் தெளியச் செய்தல். உம்மை சிறப்பு. கரியோர் - சான்று கூறுவோர். பிறழ்தல் - மாறுபடுதல். பெரியோர் மொழிபிறழார் என்று தேறுதல் பேதைமை யென்பது.
|
| 1`இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்` |
என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தில் `அறனளித் துரைத்தல், ஆங்கு நெஞ்சழித்தல்` என்பதனால், `அறனளித் துரைத்தல்` என்னும் மெய்ப்பாடு கூறியவாறுணர்க. |
(291) |
|
1. தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 22. |