கட
239
வரைவு கடாதல்

 
எருமை  முதலியவற்றின்  கருக்கொள்ளும்  பருவத்திற்கு  நாகு  என்னும் பெயர்
உலகவழக்கினுங் கண்டுகொள்க.   புலம்பன் - நெய்தற்றலைவன்.   பூகம் - கமுகு.
பெடை - பெடைஞெண்டு.      இன்னார் - பொல்லார்.     இனியார் - நல்லார்.

     புன்னைமர  நிழலிலிருக்கும்  ஆண்ஞெண்டு   பூக  மர   நிழலிலிருக்கும்
பெடையொடு  கூடும்  புலம்பர்  என்பதனால்,  தலைவன்   தலைவியை   வந்து
கூடுமென உள்ளுறையுவமங்  கொள்ளக்   கிடந்டதெனின்,   அங்ஙனங்  கூட்டம்
பெறாளாய்ப் பிரிந்து வருந்து கின்றாளாதலால் உள்ளுறையுவமமாகாது இறைச்சியிற்
பிறக்கும் பொருளாயிற் றெனக் கொள்க. இறைச்சியிற் பிறக்கும் பொருளாவது,

  1`இறைச்சி தானே பொருட்புறத் ததுவே`

  2`இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே`

     என்றாராகலின்  `இறைச்சி`  யென்றும்  `இறைச்சியிற்  பிறக்கும்   பொருள்`
என்றுங் கூறிய சூத்திரங்கட்கு நச்சினார்க்கினியர் செய்தவுரையிற்கண்டுகொள்க.

(293)    
தெய்வம் பொறைகொளச் செல்குவமென்றல்:
     தெய்வம்  பொறைகொளச்  செல்குவம் என்றல் என்பது,   தெய்வத்தின்முன்
பிரியேனென்று ஆணைகூறிப் பிரிந்து போனாரால் தெய்வங் கொடுந்தெய்வமாதலால்
சீறாதபடி `அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தார் அல்லர், நீ பொறுத்துக்கொள்` என்று
வேண்டிக் கோடற்கு இருவேமும் போதுவோம் என்று தலைவி பாங்கியுடன் கூறியது.

  மாதங்க நல்கங்கை வாணன்தென் மாறைவை யைத்துறைவர்
ஏதம் பயந்தில ரெங்கட்கு நீயெம் மிகந்ததனால்
கோதம் படாதி கொடுந்தெய்வ மேயென்று கூர்பலிதூய்ப்
பாதம் பரவல் லாயிரு வேமும் படர்குவமே.

     (இ-ள்.) நல்லாய்!   புலவோர்க்குப்    பெருமையையுடைய   தங்கங்களைக்
கொடுக்குங்  கையையுடைய  வாணன்  தென்மாறை  நாட்டு  வையைத்  துறைவர்
எங்கட்குக்    குற்றத்தைத்    தந்தார்    அல்லர்; எம்மைப்     பிரிந்ததனாலே
கொடுந்தெய்வமே,  நீ  குற்றப்  படாதை  யென்று  மிகுந்த  பலிகளைத்  தூவிப்
பாதத்தைத் துதிக்க இருவேமும் செல்வோம் என்றவாறு.

1. தொல். பொருள். பொருளியல் - 35.
2. தொல். பொருள். பொருளியல் - 36.