கட
தஞ்சைவாணன் கோவை
240

 
நல்கும் - கொடுக்கும்.       ஏதம் - குற்றம்.        பயந்திலர் - கொடுத்திலர்.
இகத்தல் - பிரிதல். கோது - குற்றம். அம்: அசைநிலை. படர்தல் - செல்லுதல்.
(294)    
இல்வயிற்செறித்தமை செப்பல்:
இவ்வயிற் செறித்தமை  செப்பல் என்பது,  தலைவி தன்  மெய்  வேறுபாட்டாலும்
ஊரிலுள்ளார் அலர்தூற்றலாலும்  நற்றாய் உளத்தில்  வெறுப்பாகி  மனையிடத்தில்
என்னைக் காவல் செய்தாளென்ற பாங்கிக்குக் கூறல்.

  தன்போ லுலகம் புரக்கின்ற வாணன் தமிழ்த்தஞ்சையார்
மன்போ லெவர்க்கும் வழங்கியுண் ணாதவர் வைத்திழக்கும்
பொன்போ லிறுகப் பொதிந்துகொண் டாளன்னை பூவையென்மேல்
வன்போ தியமட வாரலர் தூற்றிய வாறுகண்டே.

    (இ-ள்.) பூவைபோல்வாய்!  தன்னயிர்போல உலகத்திலுள்ள வுயிரையெல்லாங்
காக்கின்ற  வாணனாகிய  தமிழ்த்   தஞ்சையார்  வேந்தைப்போல,  
 யாவர்க்கும்
வழங்கியுண்ணாதவர் வைத்து இழக்கப்பட்ட பொன்னைப்போல என்னை அன்னை
எனமேற்  பொல்லாங்கு கூறப்பட்ட
 நமக்கு அயலாராகிய மடவார் அலர் தூற்றிய
முறைமையைக்  கண்டு இறுக
 முடிந்துகொள்ளுதல் போலுஞ்  செறிப்புச் செய்தாள்
என்றவாறு.

    புரத்தல் - காத்தல்.     பொதிதல் - முடிதல்.    ஆறு - முறைமை வன்பு -
பொல்லாங்கு.    `உண்ணாதவர்  வைத்திழக்கும்   பொன்    போல்`   எனவே,
அன்னையும்  தன்னை யிழப்பவளாதலால், `அவர் போல் பொதிந்து கொண்டாள்`
என உள்ளுறையுவமங் கொள்க.
(295)    
செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறல்:
    செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் என்பது, செவிலி செறிந்த
இருட்குறியிடத்துத் தலைவன் வரக்கண்டாள் எனத் தலைவி பாங்கிக்கு உரைத்தல்.

 

வெங்கார் முகவெம் புருவமின் னேயன்னை மேலொருநாள்
எங்கா தலரிரு ளெய்தல்கண் டாளிந்த ஏழுலகும்
மங்காமல் வந்தருள் வாணன்தென் மாறைவண் டானமஞ்சச்
சங்காழி கொண்டெறி யுங்கண்டல் வேலியத் தண்துறைக்கே.

    (இ-ள்.) வெவ்விய  விற்போன்ற  வெய்ய  புருவத்தையுடைய  மின்னே, இந்த
ஏழுலகும்   கெடாமல்  வந்து   காக்கப்பட்ட  வாணன்  தென்மாறை   நாட்டில்
வண்டானம்  அஞ்சக்  
 கடலானது சங்கைக்கொண்டெறியும் தாழைவேலி செய்தாற்
போன்றிருக்கின்ற தண்ணிய துறையின் கண் எம்முடைய காதலர்