|
|
இருட்குறி வருதலை முன்னம் ஒருநாள் அன்னை கண்டாள் என்றவாறு. |
கார்முகம் - வில். மங்காமல் - கெடாமல். வண்டானம் - நாரை. `ஆழிசங்கு` என இயையும். கண்டல் - தாழை. சங்கு கொண்டெறிதல் - திரை விசையால் சங்கினை யுந்துதல்.
|
இவற்றுள், `கலுழ்தற் காரணம் கூறல்` ஒன்றும் ஒழித்து, ஏனைய வெல்லாம் பாங்கி வினாவாதொழியவும், தலைவி அறத்தொடு நிற்கும் நிலை தனக்கு உரியவாமாறு அறிந்துகொள்க. |
(296) |
பகலினுமிரவினும் பயின்றுவரு கென்றல்: |
| செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல்: பொன்னுற்ற கொங்கையு முத்துற்ற கண்ணுமிப் போதுகண்டேன் பன்னுற்ற சொல்லுமின் பாலுங்கொள் ளாள்பதி னாலுலகும் மன்னுற்ற வண்புகழ் வாணன்தென் மாறையென் மானனையாட் கென்னுற்ற தென்றறி யேன்புனங் காவல் இருந்தபின்னே.
|
(இ-ள்.) பொன்போன்ற பசலைநிறம் பொருந்திய கொங்கையும் முத்துப்போல நீருற்ற கண்ணும் இப்போது கண்டேன்; அதுவன்றியும் யான் சொல்லுஞ்சொல்லும் இனிய பாலும் உட்கொள்ளாள்; ஆதலின், பதினாலுலகும் மன்னுற்ற வளவிய புகழையுடைய வாணன் தென்மாறை நாட்டில் புனங் காவலிருந்த பின் என் மான்போற்வட்கு யாதுற்றதென்று யான் அறியேன், என்றவாறு. |
`பதினாலுலகும்` என்புழி உம்மை முற்றும்மை. `புனங்காவ லிகந்தபின்னே` என்று பாடமோதுவாரு முளர். |
(297) |
பாங்கி வெறிவிலக்கல்: |
பாங்கி வெறி விலக்கல் என்பது, செவிலி வெறியாட்டாளவை யழைத்து மகட்கு நோயுற்றவாறும், அது தீருமாறும சொல்ல வேண்டுமென்ற கேட்புழி, தெய்வம் வந்தாடும்போது, பாங்கி அத்தெய்வத்தை ஆடவேண்டா என்று விலக்குதல்.
|
வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தால் திரும் என்புழி அவ்வாட்டைக் கொல்லாமல் விலக்கல் எனினும் அமையும்.
|
| அறியாமை யானொன்று கேட்கலுற் றேனும்மை யாவதொன்றும் குறியா மறியுயிர் கொள்ளவென் றோகுரு திப்பலிகூர் வெறியால் இவளுயிர் மீட்கவென் றோவென்றி வேல்வலத்தீர் சிறியார் மனையில்வந் தீர்தஞ்சை வாணன் சிலம்பினின்றே.
|
(இ-ள்.) வெற்றிவேலை வலத்தில் உடையவரே, நும்மை யாம் அறியாமையினால் ஒன்று கேட்கலுற்றேம், ஆவதொன்றுங் குறியாது |