கட
தஞ்சைவாணன் கோவை
242

 
மறியுயிரைக் கொள்ளவென்றோ, அந்த இரத்தப்பலி  தரும் மிகுந்த  வெறியினாலே
இவள் உயிரை மீட்கவென்றோ தஞ்சைவாணன் சிலம்பினின்றுஞ் சிறியார் மனையில்
வந்தீர், திருக்கோயிற்கு எழுந்தருளவீர் என்றவாறு.

மறி - ஆடு. `திருக்கோயிற்கு எழுந்தருள்வீர்` என்றது. அவாய் நிலையான் வந்தது.
(298)    
  வெறிவிலக்கியவதனாற் செவிலி பாங்கியை வினாதல்:
மண்குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன்தஞ்சை
ஒண்குன்ற மங்கையர் முன்னர்மின் னேயுமை யாள்மகனைப்
பண்குன்ற வென்றசொல் வள்ளிதன் கோனைப்பைந் தாரயிலால்
வெண்குன் றெறிந்தசெவ் வேளையிவ் வாறென் விளம்பியதே.

    (இ-ள்.) உலகங்  குன்றவந்த  கலியுகத்தை  மாற்றிய  வாணன்   தஞ்சையது
ஒள்ளிய  குன்றிடத்து  மின்னே,  உமையாள்  மகனைப்   பண்குறைய   வென்ற
சொல்லையுடைய  வள்ளிக்கு  நாயகனைப்  பசிய  மாலை  சூடிய   வேலினாலே
வெண்குன்றமாகிய  குருகு  பெயர்க்
 குன்றத்தை யெறிந்த செவ்வேளை மங்கையர்
முன்னர் இவ்வாறு நீ விளம்பியது என்ன? என்றவாறு.

    அயில் - வேல்.   வெண்குன்று - கிரவுஞ்சகிரி   `குன்றமின்னே`   எனவும்,
`செவ்வேளை  மங்கையர்  முன்னே` எனவும்,    `விளம்பிய தென்னே`  எனவும்
இயையும்.
(299)    
தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்:
    தோழி   பூத்தரு   புணர்ச்சியால்  அறத்தொடு  நிற்றல்  என்பது   பூவைக்
கொடுத்தனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்திக் கூறல்.

  போருறை தீக்கணை போலுதின் கண்கண்டு போதவஞ்சி
நீருறை நீலமு நியுநண் பாகென்று நின்மகட்கொர்
தாருறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
காருறை சோலையில் யாம்விளை யாடிய காலையிலே.

    (இ-ள்.) அன்னாய்! போருறைந்த  தீய கணையையொக்கும் நினது கண்ணைக்
கண்டு  மிகவும் அஞ்சி நீரிலே ஒளிந்து உறைந்த நீலமும் நீயும்  உறவாக என்று,
நின்மகட்கு,  ஒரு  தாருறைந்த தோளையுடையவர், வாணன் தமிழ்த் தஞ்சையைச்
சூழ்ந்து புயலுறைந்த சோலையிடத்து  யாம் விளையாடிய
 காலத்தில், நீலப்பூவைத்
தந்தனர், என்றவாறு.

நண்பு - உறவு. தார் - மாலை. கார் - புயல்.
(300)