கட
243
வரைவு கடாதல்

 
புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்:
புனல்தருபுணர்ச்சியால்  அறத்தொடுநிற்றல்  என்பது, புனலாற் கூடும் புணர்ச்சியை
வெளிப்படுத்திக் கூறல்.

  ஒழிதோற் றியசொல்ல லுன்மக ளோதிக் குடைந்தகொண்டல்
பொழிதோற் றிரளுந்தி வந்தசெந் நீருந்திப் பொற்பினுக்கோர்
சுழிதோற் றிடும்பகை தீர்க்கின்ற போதொரு தோன்றலுமவ்
வழிதோற்றி வந்தெடுத் தான்தஞ்சை வாணன்தென் வையையிலே.

     (இ-ள்.) அன்னையே! நின் மகள் ஓதிக்கு  ஒப்ப நில்லாது  உடைந்த மேகம்
தோற்ற பகை தீரத்தற்காய்ப்  பொழியப்பட்ட,  யானைத்திரளைத் தள்ளிக்கொண்டு
வந்த,   சிவந்த  நீர்வெள்ளம்  தஞ்சைவாணன்  தென்வைகையிடத்துப்   பெருக,
நின்மகளுந்திக்குத் தோற்றுப்போன பகையைத் தீர்த்தற்கு யாம நீராடிய  காலத்தில்
கழிவந்து நின்மகளை வாங்கிக் கொண்டு போம் போதில், அவ்வழியிலே வருவான்
ஒரு வேந்தன் வந்து எடுத்தான்,  ஆதலால்,  நின்  கருத்தில்   தோன்றியதனைச்
சொல்லுதல் ஒழிவாயாக என்றவாறு.

     எனவே, புணர்ச்சியுண்மை கறிப்பினாற் றோன்றியவாறாயிற்று. ஓதி - கூந்தல்,
கொண்டல் - மேகம்.   தோல் - யானை.    உந்தி - தள்ளி.  உந்தி - கொப்பூழ்.
தோன்றல் - வேந்தன்.

(301)    
களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்:
     கறிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல் என்பது களிறுதரு புணர்ச்சியாற்
களவை வெளிப்படுத்தல்.

  மண்ணலை யாமல் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவெற்பில்
அண்ணலை யாயிழை பாகனென் றஞ்சின மஞ்சனந்தோய்
கண்ணலை நீரிடப் பாகமு மேல்வந்த கைக்களிற்றின்
புண்ணலை நீர்வலப் பாகமுந் தோயப் பொருதஅன்றே.

     (இ-ள்.) அன்னையே!  இப்புவியை  அலையாமல்  வளர்க்கின்ற   வாணன்
தென்மாறை  வெற்பில்   யாம்  சோலையில்  விளையாடுகையில்,  ஒரு   யானை
பாயவரும்போது நின்மகள் அலறிக்கூவ,  அப்போது  அவ்வழியில் வருகின்றோன்
ஒரு வேந்தன் விரைந்து வந்து, அஞ்சலையென்று,  நின்  மகளை  இடப்பக்கத்தில்
அணைத்துக்கொண்டு வலக்கையில்  மேல்வாங்கி  மேல்வந்த  கையொடுங்  கூடிய
யானைமுகத்திலழுத்திப்  பொருதவன்ற ஆனைப்  புண்ணில்  அலைபோல் வருங்
குருதிநீர்   வலப்பாகமெல்லாம்  நனைத்தலால்  வலப்பால்   சிவந்தும்,   அவள
்அழுதபோது மைகரைந்து கண்ணாகிய கடலில் வருநீர் இடப்பாகம்  நனைத்தலால்
இடப்பாகங்கறுத்தும்,