|
|
ஆணுருவும் பெண்ணுருவும் ஒன்றாய்த் தோன்றியவதனால் அவ்வேந்தனை ஆயிழைபாகன் என்ன யாம் அஞ்சினம் என்றவாறு.
|
எனவே, குறிப்பால் புணர்ச்சியுண்மையறிவித்தவாறு காண்க. அண்ணல் - வேந்தன். ஆயிழை பாகன் - சிவன். அஞ்சனம் - மை. அலை - கடல். |
(302) |
தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்: |
| தண்டார் தழுவிய வேலண்ணல் வாணன்தென் றஞ்சைவெற்பிள் வண்டார் குழலிதன் வண்ணமுங் கண்ணும் வடிவுமுன்னாள் கண்டா ரறியும் படியன வேயல்ல காரணமொன் டுண்டா லுயிரனை யாயயி ராமலுரையெனக்கே.
|
(இ-ள்.) உயிரனையாய்! தண்ணிய மாலையணிந்த வேலையுடைய பெருமை பொருந்திய வாணனது அழகிய தஞ்சை வெற்பிடத்து வண்டார்ந்த குழலையுடையாளது நிறமம் கண்ணும் வடிவும முன்னாள் கண்டார்க்கு இப்போது வேறுபட்டிருத்தலால் அறியுந் தன்மையனவே யல்ல; இவ்வடிவு வேறுபடுதற்குக் காரணம் ஒன்ற உண்டு, ஆதலால் அக்காரணத்தை ஐயுறாமல் எனக்கு உரைப்பாய் என்றவாறு.
|
ஐயுறுதல்- சொல்லத்தகாதென்று மறைத்தல். தண்டார் - மாலை. தழுவிய - அணிந்த; தென் - அழகு. வண்ணம் - நிறம். அயிர்த்தல் - அயர்ப்புறுதல். |
(303) |
செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்றல்: |
செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்றல் என்பது, முன்னிலைப் புறமொழியால் உணர்த்தாது முன்னிலை மொழியனாலே களவை வெளிப்படுத்திக் கூறல். |
| மலைவந்த தோவெனும் வாரண வாணன்தென் மாறைமதிச் சிலைவந்த தோவெனு நன்னுத லாயொரு செல்வரிங்கோர் கலைவந்த தோவென வந்துவி னாவிநங் காரிகைக்கு முலைவந்த தோவில்லை யோவென்னு நாளின் முயங்கினரே.
|
(இ-ள்.) மலைவந்ததோ என்று ஒப்புக்கூறும் வாரணத்தை யுடைய வாணன் தென்மாறை நாட்டில் மதி வந்ததோ சிலை வந்ததோ என்று ஐயந்தரு நல்ல நுதலையுடையாய்! புனங் காக்கு நாளில் ஒரு தலைவர் வந்து இங்கொரு கலை வந்ததோ என்று வினாவி, நம்முடைய பெண்ணுக்கு முலைவந்ததோ இல்லையோ என்னும் பெதம்பைப் பரவத்து முயங்கினர். |