தஞ்சைவாணன் கோவை
250

 
திருவென்று   கூறினமையால்,  செந்நாண்மலர் - தாமரைமலர்.  கோலம் - அழகு.
விரவுதல் - கலத்தல்.
 1`உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்ற`
என்னுஞ் சூத்திரத்தா னுணர்க.
(311)    
தலைவி யொருப்பட்டெழுதல்:
 பலரே சுமந்த வுரகளுந் தாயர்தம் பார்வைகளும்
சிலரே சுமந்து தரியவல் லார்செய்ய செண்பகநாண்
மலரே சுமந்த வயற்றஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
அலரே சுமந்து சுமந்தித்த வூர்நின் றழுங்குகவே.
    (இ-ள்.) பலர்   ஏசிச்  சொல்லும்  அந்த  வார்த்தைகளும்  தாயர்   சினந்து
பார்க்கின்ற  கொடிய  பார்வைகளும்
 சுமந்து திரிய வல்லமையுடையார்  சிலருளர்,
என்னால்  முடியாது;  சிவந்த  சண்பக   நாண்மலரைச்   சுமந்த
 வயல்  சூழந்த
தஞ்சைவாணனை   வாழ்த்தாத   பகைவர்போல   வசை
 கூறுஞ்   சொல்லையே
சுமந்து சுமந்து இந்த வூரிலுள்ளார் நின்றிரங்குக என்றவாறு.

`சுமந்து - திரியவல்லார் சிலரே`   எனக்கூட்டுக.   `என்னால் முடியாது`  என்பது
அவாய்நிலையான்   வந்தது.   `இந்தவூர் நின்றழுங் குகவே`   என்பது,   இடத்து
நிகழ்பொருளின்   தொழில்   இடத்து  மேல் நின்றது. அழுங்குதல் - இரங்குதல்;
கெடுதல்   என்று   பொருள் கூறுவாருமுளர். இவள் கற்புடையளாதலால்,   கூறிய
சொற்பிழையாள்;  ஆதலால்,   அவ்வாறன்றி   மீண்டும் வந்து மண முடித்தலின்;
அது பொருளன்மையுணர்க.    இரங்கல்    பொய்க்குமோ    வெனில்    இவள்
உடன்போயின பின்னர் அவ்வூரிலுள்ளார் இரங்குதலின் பொய்யாதாயிற்று.
(312)    
 பாங்கி, சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல்:
செல்லிற் கொடிய களிற்றண்ணல் வாணன்றென் மாறைமன்னன்
வில்லிற் கொடிய புருவமின் னேயென் விளம்புதிநீ
சொல்லிற் கொடியநம் மன்னையைப்போல்பவர் சூழ்ந்திருக்கும்
இல்லிற் கொடியகொல்லோசெல்லு நாட்டவ் விருஞ்சுரமே.

     (இ-ள்.)இடியினுங் கொடியதாகிய களிற்றுப்பெருமையை யுடைய வாணனாகிய
தென்மாறை மன்னனது கையிற் பிடித்த வில்லினங் கொடிய புருவத்தையுடைய மின்
போன்றவளே1  யான்  செல்லும்  நாட்டில்   அப்பெரிய  சுரமானது, சொல்லிலே
கொடியவளாகிய நம் அன்னையைப் போல்வார்

1. தொல். பொருள். களவியல் - 22.