|
|
தலைவி நாணழிவிரங்கல்: |
சூழ்ந்திருக்கும் இல்லினும் கொடியதோ என்றவாறு.
|
`சுரம் கொடியகொல் நீ விளம்புதி` என்றியையும். செல்லின் என்புழி, சிறப்பும்மை தொகுத்தல். செல் - இடி. அண்ணல் பெருமை. கொல்: அசை. ஓகாரம் எதிர்மறை. சுரம் - காடு. |
(313) |
பாங்கி, கையடை கொடுத்தல்: |
பாங்கி கையடை கொடுத்தல் என்பது, பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தல்; கையடை - அடைக்கலம்.
|
| 1`வடமால் வடநிரை சாயினும் வண்புயல் வாரிபுகும் கடனா கியநெறி கைவிட நீக்கினுங் கந்தலைக்கும் அடன்மா களிற்றன்ப நின்னையன் னார்பின்னை யென்னையென்னார் 2`உடனாய கேண்மை யொழிந்தறி யாரிவ் வுலகத்திலே.` |
(314) |
(இது பிறசெய்யுட் கவி) |
பாங்கி, வைகிருள் விடுத்தல்: |
பாங்கி வைகிருள் விடுத்தல் என்பது,பாங்கி யிருளார்ந்த இடையாமத்தில் விடுத்தல்; வைகுதல் - தங்குதல்.
|
| பொழிநான மன்றலம் பூங்குழல் நீங்கள் புணர்ந்துசெல்லும் வழிநாடி நும்பின் வருகுவல் யான்தஞ்சை வாணன்வையைச் சுழிநாணு முத்திநின் றொல்கிளைக் கேற்பன சொல்லியின்னா மொழிநா வடங்க மொழிந்தய லாரை முகங்கவிழ்த்தே.
|
(இ-ள்.) மான்மதம் பொழியப்பட்ட மணத்தோடு கூடிய பூவையணிந்த குழலையும் தஞ்சைவாணன் வையைச் சுழி நாணப்பட்ட வுந்தியையும் உடையாய், நின் பழமையால் வருகின்ற சுற்றத்தார்க்கு ஏற்பனசொல்லி, அயலாரை அலர்கூறிய நாவடங்க மொழிந்து தலைவளையச் செய்து, நீங்கள் கூடிச்செல்லும் வழிதேடி யானும் பின்னே வருவேன் என்றவாறு.
|
|
1. அம்பிகாபதிகோவை - 325. |
2. `பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாடிறத் துச்சிலம்பா அறத்திருந் துன்னரு ளும்பிறி தாறி னருமறையின் திறந்திரிந் தார்கலியும்முற்றும் வற்றுமிச்சேணிலத்தே.` |
கோவையார் - 213; இது சில பிரதிகளிற் காணப்படுகிறது. |