|
|
நானம் - மான்மதம். மன்றல் - மணம். புணர்தல் - கூடல். கிளை - சுற்றம். இன்னாமொழி - அலர்மொழி. `மன்றலம் பூங்குழல், தஞ்சைவாணன் வையைச் சுழிநாணு முந்தி` எனக் கூட்டி ஆகுபெயராகக் கூறுக. |
(315) |
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்: |
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல் என்பது, ஐம்பத்து மூன்றாநாள், தலைமகன் தலைமகளைச் சுரத்திற் செலுத்தல்.
|
| தளிபோற் கொடைபயில் சந்திர தமிழ்த்தஞ்சையான் அளிபோற் குளிர்ந்த இளமரக் காவு மவன்புகழின் ஒளிபோல் விளங்கிய வெண்மணல் யாறு முவந்துகண்டு நளிபோ தவிழ்குழ லாய்மெல்ல மெல்ல நடந்தருளே.
|
(இ-ள்.) குளிர்ச்சி யுடைய மலர் முறுக்கவிழப்பட்ட குழலை யுடையாய்! மேகம்போற் கொடுக்குந்தொழில் பழகிய சந்திரவாணனாகிய தமிழ் விளக்கப்பட்ட தஞ்சையான் அன்புபோல் குளிர்ந்த இளமரச் சோலையும் அவனது புகழின் ஒளியைப்போல வெண்மணல்செறிந்த கான் யாறும் கண்டு மகிழ்ந்து மெல்ல நடந்தருள்வாயாக என்றவாறு.
|
தளி - மேகம். பயிலுதல் - பழகுதல். அளி - அன்பு. கா - சோலை. ஆறு - கான்யாறு. உவத்தல் - மகிழ்தல். நளி - குளிர்ச்சி, `கண்டுவந்து` என இயையும். |
(316) |
தலைமகன் றலைமக ளசைவறிந் திருத்தல்: |
அசை - வருத்தம். 1` அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை` என்றார் பிறரும். அசைஇய - வருந்திய. |
| வரமாமை வேற்படை வாணன்தென் மாறை வணங்கலர்கள் புரமான வல்லழல் பொங்குவெங் கானிற் பொருந்தியகூர் அரமான கல்லுன் னடிமல ராற்றல வாதலினாம் சுரமாறு மெல்லைநல் லாயிருப் பாமிந்தச் சோலையிலே.
|
(இ-ள்.) நல்லாய், வரத்தையுடைய மாமைநிறம் பொருந்திய வேற்படையையுடைய வாணன் தென்மாறையை வணங்காதார் நகரைப்போல, வலிய அழல் பொங்கி யெழும் வெய்ய காட்டில் கூர்பொருந்திய அரத்துக் கொப்பான கற்கள் உன் அடிமலர் பொறுக்குந்தன்மைய அல்ல; ஆதலால், சுரம் ஆறுமளவும் இந்தச் சோலையிலே யிருப்பாம் என்றவாறு. |
|
1. கலித். பாலை - 10. |