255
உடன்போக்கு

 
கண்டோர் தன்பதியணிமை சாற்றல்:
கண்டோர் தன்  பதி  அணிமை  சாற்றல்  என்பது,  இவ்விடத்தில்  நும்   உரில்
வைகிப் போதல்  பொருந்தாது,  என்  பதிப்போதல்  வேண்டுமென்ற   தலைவன்
கூறியவழித்,   தலைவன்   றன்பதி  அணித்தென்பதனைக்  கண்டோர்   கூறுதல்.

 தொடங்கும் பிறைநுதற் றோகையு நீயுமுன் தோன்றுகின்ற
கடங்குன் றிரண்டுங் கடந்துசென் றாற்கம லத்தடமும்
கிடங்கும் புரிசையுஞ் சூழ்ந்தெதிர் தோன்றுங் கிளைத்தபைந்தார்த்
தடங்குங் குமநெடுந் தோள்வாணன் மாறையுந் தஞ்சையுமே.

     (இ-ள்.) வளர  ஆரம்பிக்கும்   பிறைபோலும்   நுதலையுடைய    தோகை
போன்றவளும்   நீயும்   முன்னே   தோன்றுகின்ற  காடும் சிறுமலையும்  ஆகிய
இரண்டும்  கடந்து  சென்றால்,  கமலப் பொய்கையும் அகழும் புரிசையும்  சூழ்ந்து
வாவியிற்  கிளைத்த  நீலத்தார் அணிந்த பெருமையுடைய குங்குமம் பூசிய நெடிய
தோளையுடைய  வாணன்  மாறையும் தஞ்சையும் எதிராகத் தோன்றும் என்றவாறு.

     தொடங்குதல் - ஆரம்பித்தல்.    தோகை; ஆகுபெயர்.      கடம் - காடு.
குன்று - சிறுமலை. கிடங்கு - அகழ். புரிசை - மதில்.  கிளைத்தல் - தோன்றுதல்.
`கிளைத்த பைந்தார்` என்பது,

 1`குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி`

என்றாற்போல, ஒற்றுமை நயத்தாற் செயப்படுபொருண்மேல் நின்றது.
(321)    
தலைவன் தன்பதியடைந்தமை சாற்றல்:

தலைவன்  தன்பதி  அடைந்தமை  சாற்றல்  என்பது,  தலைவன்   தலைமகட்குத்
தன்பதி யடைந்தமை யுணர்த்தல்.

 சந்தனந் தோய்ந்து தயங்குமுத் தாரந் தரித்துவிம்மும்
நந்தனந் தாங்கி நடுங்கிடை போல நடந்திங்ஙனே
நொந்தனங் காலென்ற நோவல்பொன் னேயொரு நோயுமின்றி
வந்தனங் காணிது காண்வாணன் மாறை வளநகரே.

(இ-ள்.) பொன்போன்றவளே!   சந்தனந்தோய்ந்து  விளங்கப்பட்ட முத்து   மாலை
யணிந்து  பூரிக்கும் நமது தனந்தாங்கி நடுங்கும் இடைபோல நடந்து இவ்விடத்தில்
கால் நொந்தனம் என்ற நோவற்க;ஒரு துன்பமும் இன்றி வந்தனம், வாணன் மாறை
வளநகர் இது காண்பாய் என்றவாறு.


1. திருமுருகு - 199.