257
22. கற்பொடு புணர்ந்த கவ்வை

 
அஃதாவது,   தலைவி   தலைவனது   உடைமையாய்க்  கற்பொடு  கூடியவதனை
அயலார் விராய சேரியர் பலரும் அறிதல்.

 1`செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர்மனை மருட்சி கண்டோ ரிரக்கம்
செவிலலிபின் றேடிச் சேறலென் றாங்குக்
கற்பொடு புணர்ந்த கவ்வையை வகைத்தே`

     என்னுஞ்  சூத்திர  விதியால்,  கற்பொடு புணர்ந்த கவ்வை ஐவகைப்படும்.
செவிலி பாங்கியை வினாதல்:
 நலம்புனை யாயமு நீயுநங்ற றாயொடு நானுநன்பொன்
சிலம்புயர்சோலையுஞ் சிற்றிலும் பேரிலும் தெண்டிரைமேல்
வலம்புரி யூர்வயல் சூழ்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
புலம்புற மாதரெங் கேமக ளேதனிப் போயினளே.

     (இ-ள்.) நலம்புனைந்த  ஆயமும்  நீயும் நற்றாயோடு நானும் நல்ல  அழகிய
மலையிடத்து  உயர்ந்த  சோலையும்  அவள்  விளையாடுஞ்   சிற்றிலும்   அவள்
இயங்கித்  திரியும்  பெரிய  மனையும், தெளிந்த  திரையின்மேல் வலம்புரிச் சங்கு
ஊர்ந்துவரும்  வயல்சூழ்ந்த   தஞ்சைவாணனை   வாழ்த்தாத    பகைவர்போலப்,
புலம்புதலடைய    மாதர்    எங்கே    தனியாய்ப்போயினாள்,    யான் அறியச்
சொல்வாயாக  என்றவாறு.

நலம் புனை யாயம் - தலைவிக்கு அழகாய் அலங்கரிக்கும் ஆயம்.
ஒடு: எண்ணொடு.
(323)    
செவிலி பாங்கியை வினாதல்:
 வெறுத்தா ரொறுத்துரை மேலுநங் கேளிர் விழைதலின்றி
மறுத்தா ரவற்கு மணமத னாற்றஞ்சை வாணர்பிரான்
கறுத்தார் புரத்து நடந்தனள் காளைபின் காமர்கற்பால்
பொறுத்தா ளழற்சுரந் தன்னையன் னாய்நின் பொலங்கொடியே.
(இ-ள்.) அன்னாய்!   நின்பொலங்கொடி, நம் சுற்றத்தார் வெறுத்தார்,  அதன்றியும்,
ஒறுத்த  சொல்லைச் சொல்லுதன் மேலும் விழைதலின்றி அத் தலைவற்கு மணத்தை
மறுத்தார்; அதனால் தஞ்சைவாணர் குலத்துக்குப் பிரான் கோபித்த பகைவரூராகிய
காட்டில் காளைபின் நடந்தனள், அழகிய

1. அகப்பொருள் விளக்கம். வரைவியல் - 13.