259
கற்பொடு புணர்ந்த கவ்வை

 
வழியா - வழிந்து.    கழியாத - நீங்காத.   ஒழியாது - விடாது.   ஆல் : அசை.
ஒன்றை என்புரிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது.
(326)    
செவிலி தெய்வம் வாழ்த்தல்:
 இணங்கிப் புவனத் தெவருமில் லாவென் இளங்கொடியாள்
உணங்கிக் கழிதலொழியவென் பால்வர உன்னையன்பால்
வணங்கிப் பலமுறை வாழ்த்துகின் றேன்தஞ்சை வாணன்தெவ்வை
அணங்கித் திரள்புயத் தான்மல யாசலத் தாரணங்கே.

     (இ-ள்.) பகைவரை   வருத்தியவதனாற்    பூரித்துத்   திரண்ட   புயத்தை
யுடையவனாகிய  தஞ்சைவாணனது  பொதியமலையிலிருக்கின்ற   அரியதெய்வமே!
இப்புவனத்து   நட்புக்  கூடுதற்கு  எவரும் இல்லாத என்  இளங்கொடிபோல்வாள்
வாடிப்  பாலைவனத்துப்  போதலையொழிய, என்னிடத்து வர, உன்னை  அன்பாற்
பலமுறை   வணங்கித்   துதிக்கின்றேன்;  வரின்  நினக்குச்  சிறப்புச்  செய்வேன்
என்றவாறு.

     இணங்க - இணங்கு எனத் திரிந்து நின்றது;

     1`காப்பி னொப்பி னூர்தியி னிழையின்`
என்னும்  வேற்றுமையியற்  சூத்திரத்தான், இழைத்தல் என்னும் சொல் இழை  என
நின்றாற்போலக்  கொள்க. உணங்கி - வாடி. கழிதல் - போதல்.அணங்கி -வருத்தி.
மலயாசலம் - பொதியமலை.  ஆரணங்கு - அரிய  தெய்வம்.   `வரின்  நினக்குச்
சிறப்புச்  செய்வேன்` என்பது அவாய்நிலையான் வந்தது. இவை மூன்ற  கிளவியும்
செவிலி புலம்பற்கு உரியவாம் என்க.
(327)    
செவிலி நற்றாய்க்கறத்தொடு நிற்றல்:

செவிலி    நற்றாய்க்கு   அறத்தொடுநிற்றல்   என்பது    செவிலி    நற்றாய்க்கு
உடன்போக்கை வெளிப்படுத்திக் கூறல்.

 சகநல்க வந்தருள் சந்திர வாணன்தென் தஞ்சைநல்லாய்
முகநல்கி நல்க முலைகொடுத் தாரின்முத் தங்கொடுத்தார்
மிகநல்ல ரென்பது மன்பதை தேற விடலைபின்னே
மகநல்கு மந்தியங் கானடந் தாளுன் மடந்தையின்றே.

(இ-ள்.) உலகத்தில்  மகிழ்ச்சி கொடுக்க வந்தருளப்பட்ட சந்திரவாணனது  அழகிய
தஞ்சையிலிருக்கின்ற நல்லாய்! முகங்கொடுத்து மேலைக்கு

1. தொல். சொல். வேற்றுமையியல் - 72.