கட

தஞ்சைவாணன் கோவை

26

 
சென்று கோத்தாற்போலவும், வெங்கதிர்க்  கனலியும் தண்கதிர் மதியமும்  தன்கதி
வழுவித் தலைப்  பெய்தாற்போலவும் தலைப்பெய்து ஒருவரொருவரைக்  காண்டல்
நிமித்தமாகத் தமியராவர் என்பது.

புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை அன்னஞ்செந்நெல்
வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே.

     உரை  கூறுமிடத்து 1நான்கு வகையாற்  கூறப்படும். அவை  யாவையெனின்,
கருத்துரைத்தல்,  கண்ணழித்தல்,  பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல் என  இவை.
அவற்றுள், கருத்துரைத்தலாவது - சொல்லப்படுஞ் செய்யுளின்  கருத்தையுரைத்தல்.
கண்ணழித்தலாவது - பதப்பொருள்  உரைத்தல்.  பொழிப்புத்திரட்டலாவது - அச்
செய்யுளிற் கூறப்படும் பொருளைத் தொகுத்து ஒரு பிண்டமாகக் கூறுதல்.  அகலங்
கூறலாவது - அச்செய்யுளின்   பொருளைத்   தூய்மை   செய்தற்குக்  கடாவிடை
யுள்ளுறுத்தி  ஐயந்தீர விரித்துக் கூறல்.

     அவற்றுள்   இச்செய்யுட்குக்  கருத்துரை  யாதோவெனின்,  கிளவி  கூறவே
2கருத்துரை  விளங்கிநின்றதெனக் கொள்க.

     (இ-ள்.)  புயலே   சுமந்து - புயலைத்    தாங்கி,   பிறையே   அணிந்து -
மதிக்கலையைத   தரித்து, பொரு வில்லுடன் கயலே மணந்த கமலம்   மலர்ந்து - போர்  செய்யும் வில்லுடனே  கெண்டைமீன்  பொருந்திய தாமரைமலர்ந்து,  ஒரு
கர்பகத்தின்   அயலே -ஒரு   கற்பகத்தின்  பக்கத்து,   பசும்பொற்கொடி - பசிய
காமவல்லிக்    கொடி, நின்றது - என்  கண்ணெதிரே   நின்றது,   ஆல்: அசை,
வெள்ளை  அன்னம் - வெள்ளை நிறத்தையுடையஅன்னம்,   செந்நெல் - சிவந்த
நெல்,   வயல் - கழனி,  தடம்பொய்கை - பெரிய வாவி,சூழ் - சூழ்ந்த,   தஞ்சை
வாணன் - 3தஞ்சையில் இருக்கும் வாணன்,மலையத்திலே -பொதிய  மலையிடத்து
என்றவாறு - இது கண்ணழித்தல்.

     (பொழிப்புரை) அன்னப்புள்  செந்நெல் செறிந்த வயலும், வாவியும்   சூழ்ந்த
தஞ்சைவாணன் பொதியவெற்பில் ஒரு கற்பகத்


     1.`பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
      பழிப்பில் சூத்திரம் பண்ணல் நான்கே` - என்பதனானுணர்க. (பாடம்.)
2. கருத்துரையாய். 3. தஞ்சாவூரில், தஞ்சாக்கூரில். தொல் - பாயிர உரை மேற்கோள்.