|
|
மகிழ்ச்சி அவள் கொடுக்க எண்ணி முலை கொடுத்தாரின் முத்தங்கொடுத்த கணவரே மிக நல்லர் என்பது உலகத்து மக்களெல்லாம் தெளிய, உன் மடந்தை இன்று மகப்பெறு மந்திகள் இயங்குங் காட்டில் விடலைபின்னே நடந்தாள் என்றவாறு.
|
சகம் என்புழி ஏழனுருபு தொக்கது. நல்லாய் - நற்றாய். மன்பதை -மக்கட்கூட்டம். தேற - தெளிய. மக - குரங்குக்குட்டி;
|
| 1`கோடுவாழ் குரங்குக் குட்டி கூறுப` 1`மகவும் பிள்ளையும் பறழும பார்ப்பும் அவையு மன்ன வப்பா லான` |
என்பதனான் உணர்க. மந்தி - பெண்குரங்கு; |
| 1`குரங்கு முகவு மூகமு மந்தி` |
என்பதனான் உணர்க. கான் - காடு. |
(328) |
நற்றாய் பாங்கியொடு புலம்பல்: |
| முன்னே யிதனை மொழிந்தனை யேல்நுந்தை முந்தைமணம் பின்னேய் குழலி பெறாளல்ல ளேபிற ழாதெவர்க்குந் தன்னேயம் வைத்தரு ளுந்தஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பில் பொன்னே யனையநல் லாயவ மேசுரம் போக்கினையே. |
(இ-ள்.) எவர்க்கும் நிலைவிட்டுப் பெயராது தன்னுடைய அன்பை வைத்துக்காக்கும் தஞ்சைவாணன் பொதியமலை யிடத்துப் பாற்கடற் பிறந்த மடவார் பலருள்ளும் திருமகளே யொப்பாகிய நல்லாய்! கரம்போவதற்கு முன்னமே இதனை மொழிந்தனையாகின் நுந்தந்தை முற்காலத்தில் என்னை மணஞ் செய்ததுபோலப் பின்னுதல் பொருந்திய குழலையுடையாள் மணம் பெறுவாளே, இச்செய்தியை என்னுடன் சொல்லாமல் மகளை வீணே சுரத்திற் போக்கினையே என்றவாறு.
|
நுந்தை - நுந்தந்தை. முந்தை - முன்பு. மணம் என்புரி உவமத் தொகை. பிறழ்தல் - பெயர்தல். நேயம் - அன்பு. பொன்னே என்புழி ஏகாரம்: பிரிநிலை; அவளுடன் பிறந்தார் பலருள்ளும் அவளையே பிரித்து வாங்குதலின். அவம் - வீண். சுரம் - கான். |
(329) |
அதுகேட்ட பாங்கி அழுங்கக் கண்டு நற்றாப் புலம்பல்: |
| இல்லுங் கழங்கா டிடங்களு நோக்கி யிரங்கல்வம்பும் வல்லும் பொருங்கொங்கை மங்கைநல் லாய்தஞ்சை வாணனென்னார் புல்லுந் துணைவியர் போல்வினை யேன்பெற்ற பூவையன்னாள் சொல்லுஞ் சுரத்தழ லன்றுன்கண் ணீரெற் றெறுகின்றதே.
|
|
1. தொல். பொருள். மரபியல் - 13, 64, 18. |