தஞ்சைவாணன் கோவை
260

 
    (இ-ள்.) கச்சும் சூதும் தம்முட்பொருங் கொங்கையையுடைய மங்கை நல்லாய்!
தஞ்சைவாணனுக்குப் பகையாயினோர்  கூடும் மனைவியர் போலத்  தீவினைசெய்து
யான் பெற்ற    பூவைபோன்ற   மகள்   வருந்திச்   செல்லும் பாலைச் சுரத்தில்
விழுந்திருக்கும்  அழலன்று,  அழுகின்ற நினது கண்ணீரே யென்னைச் சுடுகின்றது;
மகள் இயங்கித்   திரிகின்ற  மனையையும் அவள் கழங்காடுகின்ற  இடங்களையும்
நோக்கி நீ கலுழற்க என்றவாறு.

கழங்காடுதல் - கழற்சிக்காய்    ஏழு   கைப்பிடித்தாடுதல்.   இரங்கல் - அழுதல்.
வம்பு - கச்சு. வல்லு - சூது.  வம்பும் வல்லும்  பொருதல் - வல் ஒப்புப்  பார்க்க
வருங்கால்  வம்பே  மறையற்க  என்புழி,  நீ யொப்பாகாயென்ற வம்பு  விலக்குழி,
ஒன்றோடொன்று பொருதலாயிற்று. தெறுதல் - சுடுதல்.
(330)    
நற்றாய் பாங்கியொடு புலம்பல்:
  நேயம் புணைதுணை யாகவெங் கானக நீந்தலெண்ணி
ஆயம் புலம்ப அகன்றன ளோகல் லகங்குழைய
மாயம் புகலொரு காளைபின் வாணன்தென் மாறையன்னீர்
சேயம் புயமலர் போலடி நோவவென் சில்வளையே

(இ-ள்.) வாணன்  தன்மாறை நாடுபோன்ற பெண்காள்! கல்லும்  நெஞ்சங்குழையப்
பொய் சொல்லப்பட்ட  ஒரு காளை  பின் என்  சில்வளையை  யுடையாள் சிவந்த
தாமரை மலரை யொக்கும். அடிகள் நோவ வெவ்விய காடாகிய வெள்ளத்தை  நீந்த
எண்ணி, அன்பினைத்  தெப்பமும் துணையுமாக  ஆயக்கூட்டம் புலம்பப்  பிரிந்து
போயினாள் என்றவாறு.

நேயம் - அன்பு.  புணை துணை என்புழி உம்மைத்தொகை. நீந்தல்  என்பதனால்
வெள்ளம்   வருவிக்கப்பட்டது.   ஏகாரம் :  ஈற்றசை. கல்  என்புழி  சிறப்பும்மை
தொக்குநின்றது.

  1`குன்றின், நெஞ்சுபக வெறிந்த அஞ்சுடர் நெடுவேல்`
என்பதுபோலக், கற்குநெஞ்சு கூறினாரென்று உணர்க, மாயம் - பொய்.
அம்புயம் - தாமரை. சில்வளை: ஆகுபெயர்.
(331)    
நற்றாய் அயலார் தம்மொடு புலம்பல்:
  மேனாள் வரங்கிடந் தென்போல் வருந்தி மிகவுமெய்ந்நொந்
தீனா தவர்துன்ப மெய்துவ ரோவிமை யோருலகம்
தானாண நீடு மதிற்றஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பின்
மானார் விழியனை யாள்விளை யாடிய வண்டல்கண்டே


1. குறுந்தொகை, கடவுள் வாழ்த்து.