|
|
(இ-ள்.) தேவருலகத்தார் நாண நீண்ட மதில்சூழ்ந்த தஞ்சைவாணன் தமிழ்ச்சிலம்பில் விழிமான் போன்றவள் விளையாடிய வண்டலம்பாவையைக் கண்டு பண்டை நாளில் வரங் கிடந்து என்னைப்போற் பத்துமாதஞ் சுமந்து வருந்தி மிகவும் மெய்ந்நொந்து பெறாதார் துன்பம் எய்துவரோ, யானும் பெறாதிராது, பெற்றுத் துன்பத்தை எய்தினேன் என்றவாறு.
|
மேனாள் - பண்டைநாள், ஈனாதவர் - பெறாதவர். வண்டல்: ஆகுபெயர். எய்திலரே என்பது முன்னிலையெச்சம். |
(332) |
நற்றாய் தலைமகள் பயிலிடம் தம்மொடு புலம்பல்: |
நற்றாய் தலைமகள் பயிலிடம் தம்மொடு புலம்பல் என்பது, நற்றாய் தலைவி பழகி விளையாடும் இடங்களோடு நொந்துகூறல்.
|
| செயலைத் தருவின் திருநிழ லேபெருஞ் சிற்றல்லமே வயலைக் கொடிநொச்சி மண்டப மேதஞ்சை வாணனொன்னார் இயலைத் தனித்தனி தந்தன ளேநமக் கின்றிதன்றோ கயலைப் பொருதகண் ணாள்மேலும் வாழ்விக்குங் கட்டளையே.
|
(இ-ள்.) அசோகத்தருவின் அழகிய நீழலே! பெரிதாய் வளைத்த சிற்றில்லமே! வெளியிலே செய்த கொடி கட்டிய மதில் சேர்ந்த மண்டபமே! தஞ்சை வாணனுக்குப் பகைவ ரிலக்கணத்தை நமக்கு இன்று தனித்தனி தந்தாள் கயலுடனே போர்புரிந்த கண்ணாள்; இனிமேலும் நம்மை வாழ்விக்கும் கட்டளை யிதுவன்றோ என்றவாறு.
|
செயலை - அசோகு. திரு - அழகு. பெருஞ்சிற்றில் - அவர் விளையாடுஞ் சிற்றிலினும்பெரிதாய் வளைத்த சிற்றில். வயலை - வெளி. நொச்சி - மதில். `தனித்தனி தருதல்` பகைவர் பலராதலால் அவரவர் படுந்துன்பங்களை வேறு வேறுபடுத்தல், மேலும் - இனிமேலும், கட்டளை - முறைமை.
|
இவை ஐந்தும் நற்றாய் புலம்பற்கு உரியவாமென்க. |
(333) |
நிமித்தம் போற்றல்: |
நிமித்தம் போற்றல் என்பது, சகுனப்புள்ளைத் துதித்தல்.
|
| வடியேய் புகர்முக வாள்வல வாணன்தென் மாறையுள்யான் அடியே தொழுந்தெய்வ மாகநிற் பேணி யரும்பலியிப் படியே தருகுவ லென்றுமின் னேயிப் பதியுவகைக் கொடியே வரக்கரை நீகொடி யேன்பெற்ற கொம்பினையே. |