263
கற்பொடு புணர்ந்த கவ்வை

 
தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல்:
தன் மகள்  மென்மைத் தன்மைக்கு இரங்கல் என்பது, நற்றாய் தன்மகள் மெல்லிய
இயல்பாகிய தன்மைக்கு இரங்கல்.

 1தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணளிச்சப்
பூமேல் மிதிக்கிற் பனத்தடி பொங்குதங் காயெரியும்
தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படி பா
யாமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே.
(இது பிறசெய்யுட்கவி)
(336)    
இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்கல்:
     இளமைத் தன்மைக்கு  உளம்  மெலிந்து இரங்கல் என்பது, நற்றாய் தலைவி
இளமைத் தன்மைக்கு மனமெலிந்து இரங்கிக் கூறல்.

 இரும்பா மனங்கொண்ட வாறென்னை நீதன்னை யேத்தியென்றும்
வரும்பா வலர்க்கருள் வாணன்தென் மாறை வளவயலில்
கரும்பார் மொழியா யழலென்று கண்ணீர் துனத்தணைத்துன்
அரும்பா முலைசெய்ய வாய்ப்பசும் பாவைக் களிக்குமின்னே.

     (இ-ள்.)  தன்னைத்   துதித்துவரும்   புலவர்க்கு   என்றும்  அருளப்பட்ட
வாணன்தென்மாறைநாட்டு   வளவயலில்  வளருங் கரும்பு போன்ற  மொழியினை
யுடையாய்!  விளையாடும் பாவையை நோக்கி, அழாதையென்று கண்ணீர் துடைத்து
அணைத்து, உன்  மார்பில்  அரும்பாத  முலையைச் செய்ய வாயையுடைய  பசும்
பொன்னாற் செய்த பாவைக்களிக்கும் இளமைத் தன்மையுடைய  மின்போன்றவளே!
என்னை விட்டுப் பிரிந்துபோக நீ இரும்பை யொக்கும்  மனங்கொண்ட  முறையை
எப்படி என்றவாறு.

பாவலர் - புலவர். பசும்பாவை   என்றதனால்பொன்    வருவிக்கப் பட்டது. மின்:
ஆகுபெயர்.

(337)    


1. திருக்கோவையார் - 228.
இச் செய்யுளுக்கு மாறாக,
 `அரக்காம்பல் நாறும்வா யம்மருங்குற் கன்னோ
பரற்கான மாற்றின கொல்லோ - அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்
றஞ்சிப்பின் வாங்கு மடி`
- நாலடியார், 396.
என்னும் வெண்பா சில பிரதிகளில் காணப்படுகிறது.