|
|
| 1`பாலொடு தேன் கலந் தற்றே` |
என்புழிக், `கலந்ததற்றே` என்பது, `கலந்தற்றே` என நின்றாய் போற் கொள்க. கவை : என இடைக்குறை தணந்து - விட்டு நீங்கி. மைந்து - வலி. கதம் - சினம். பயந்தவள் - ஈன்றாள். |
இஃதொன்றும் கண்டோரிரங்கற்கு உரித்து. |
(339) |
செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல்: |
செவிலி ஆற்றத்தாயைத் தேற்றல்என்பது, செவிலி ஆற்றாத நற்றாயைத் தேறுமாறு கூறுதல். |
| நன்றே யிதென்று முகமுக நோக்கி நகைநகையா மன்றே அலர்சொல்லு மாதர்முன் னேதஞ்சை வாணன்தொல்சீர் சென்றே பரந்த திசைகளெல் லாஞ்சென்று தேர்ந்தணங்கை இன்றே தருவனன் னேவருந் தாதிங் கிருந்தருளே. |
(இ-ள்.) அன்னே, இவள் ஒருவன் பின்னே சுரம் போயின இது நன்றாயிருந்ததென்று ஒருவர் முகம் ஒருவர் நோக்கி நகையை நகைத்து வெளியிலே அலரைத்தூற்றும் மாதர்முன்னே. தஞ்சைவாணனது பழகிய கீர்த்தி போய்ப் பரந்த திசைகளெல்லாம் போய்த் தேடி அணங்குபோல் வாளை இற்றைப்பொழுதே தருவேன்; யான் போய்வருவமளவும் வருந்தாது இங்கிருந்தருள் என்றவாறு.
|
முன் ஏகார மூன்றும் ஈற்றசை; பின் ஏகாரம் ஒன்றுந் தேற்றம். `நன்றேயிது` என்னுங் குறிப்புமொழி அசதிக்கண்தீதையுணர்த்தி நின்றது. நகையா - நகைத்து. மன்று - வெளி. தேர்தல் - தேடல். அணங்கு: ஆகுபெயர். |
(340) |
ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்: |
ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் என்பது, செவிலி தேடிப் போங்கால் வழியிடை எதிர்வரும்முக்கோலுடைய அந்தணரை வினாவுதல். |
| ஒருவெண் கடையிரு நீழல்முக்கோல்கொண் டொழுக்கத்தினால் அருவெங் களரியைந் தாறுசெல் வீரரு ளீரெழுபார் மருவெண் திசைபுகழ் வாணன்தென் மாறையென் வஞ்சியன்னாள் பொருவெஞ் சுடரிலை வேலொரு காளைபின் போயினளே. |
(இ-ள்.) ஒரு வெண்குடையினது பெரிய நீழலிலே மூன்று தண்டுகொண்டு ஆசாரத்தினால் அரிய வெவ்விய களர்நிலத்திலியைந்து வழிச்செல்வீர், ஏழுபாரிலும் மருவிய எண்டிசையிலுள்ளோராற் புகழப்பட்ட |
|
1. குறள். காதற்சிறப்புரைத்தல் - 1. |