|
|
அலங்கரிக்குஞ் சித்திரப் பாவைபோல் வரப்பட்ட பெண்ணே! தஞ்சைவாணனின் பகைவராயுள்ளார் நெருங்கும் வலிய காட்டிலிருக்கும் எயினருக்கு அருமையாகிய மகளே! அம்மகள் போனவரியை எனக்குச் சொல்வாயாக என்றவாறு. |
செருமகள் - வீரமகள். அயிர்த்தல் - ஐயமுறல், ஓவியம் - சித்திரப்பாவை. அதர் - வழி. இப்பாட்டில் இரண்டு முன்னிலை வந்ததற்கு இலக்கணமும் உதாரணமும் களவியலிற் கூறினாம், ஆண்டுக் (செய். 96) காண்க. |
(343) |
செவிலி குரவொடு புலம்பல்: |
| இரவேய் குழலியின் றேதிலன் பின்செல்லல் என்ற செர்ல்லாக் குரவே அறவுங் கொடியைகண் டாய்கொடிக் கோகனகம் தரவே யெனவந்த சந்திர வாணன் தரியலர்போம் சுரவேய்அழல்வழி யேதனிப் போயவென் தோகையையே.
|
(இ-ள்.) தருதற்குக் கொடியொடு கூடிய பதுமநிதியென வந்த சந்திரவாணன் தரியலர்போங் காட்டில் மூங்கிலழல்பொருந்திய வழியில் தனியேபோன என் தோகை போல்வாளை நீ இவ்விடைக் கண்டுழி, இருள்போன்ற குழலாய்! இவ்வயலான்பின் செல்லாதே என்று சொல்லாத குரவே, நீ மிகவும் கொடியை என்றவாறு.
|
எனவே, நீ சொன்னால் மீளாளல்லாள்; வாளாவிருத்தலான் அறவுங் கொடியை யென்று கூறினாள். ஏதிலன் - அயலான். `குரவேகொடியை` என இயையும். கொடை மிகுதியாற்கட்டிய கொடி வாணன்மேலேற்க; கொகனகம் - பதுமநிதி. வேயழல் - மூங்கிலிற் பிறந்த அழல். தோகை : ஆகுபெயர். |
(344) |
சுவடு கண்டிரங்கல்: |
சுவடு கண்டு இரங்கல் என்பது, செவிலி நிலத்தின்மேற் காலழுந்திய குறியைக் கண்டு இரங்கிக் கூறல்.
|
| தொடுசிலைக் கானவ ரோடிய வேற்றுச் சுவடுவையே அடுசிலைக் காளை யடியவை யேறிந் தோரறிய இடுசிலைப் பார்புரக் குந்தஞ்சை வாணன் இசைக்குருகப் படுசிலைப் பாவை பதமிவை யேவண்டு பாடுகவே. |
(இ-ள்.) அம்பு தொடுக்குஞ் சிலையையுடைய ஆறலை கானவர் எதிர்நிற்கமாட்டாது ஓடிய வேறுபட்ட அடிச்சுவடு அவையே, தனது வீரத்தை அறிவுடையோ ரறியச் சயத்தம்பம் நாட்டி உலகத்தைக் காக்குந் தஞ்சைவாணனது பொதியமலையிடத்திருக்கும் பாவையடி இவை என்றவாறு. |