கட
தஞ்சைவாணன் கோவை
269

 
எனவே,  அடிச்சுவடு  கண்டவுடன்  தலைவியை  நினைந்திரங்கிய   வாறாயிற்று.
பலராய்   வந்தெதிர்த்துத்   தலைவனெதிர்   நிற்கமாட்டாது   ஒருவர்போனவழி
யொருவர்  போகாதோடுவாரது  அடிச்சுவடு,  ஒருவரடிபோ  லொருவரடி  யிராது
வேறுபட்டுத்   தோன்றுதலால்,  `கானவரோடிய  வேற்றுச்சுவடு  உவை` என்றும்,
தனித்து நிற்றலின், `பாவைபதமிவை` என்றும் கருதிக் கூறினாளென்க. இடுசிலை -
வெற்றியாலிடுஞ்  சயத்தம்பம். இசைக் குருகப்படுசிலை - இராவணனைக் பிணக்கக்
குறுமுனி  பாடும்   இசைக்கு   உருகப்பட்ட   பொதியமலை.   வண்டு - அம்பு.
பாடு - பக்கம். உகுதல் - விழுதல்.
(345)    
செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்:
    செவிலி      கலந்துடன்      வருவோர்க்கண்டு    கேட்டல்    என்பது,
உடன்போக்குப்போய்த்  தலைவனும்  தலைவியும்போல  அன்புகலந்து ஆற்றிடை
வருவோர் இருவரைக் கண்டு செவிலி வினாதல்.
  யானகம் போத வருந்தநும்போல்வனப் பெய்திவெய்ய
கானகம் போயினர் கண்டனி ரோகற்ப காடவிசூழ்
வானகம் போர்பயில் வானவற் கீந்தருள் வாணன்றஞ்சைத்
தேனகம் போருக மாதனை யாளுமொர்செல்வனுமே.

    (இ-ள்.) கற்பகக்காடு  சூழ்ந்த   வானிடத்தைப்  போர்செய்யுஞ்  சேரனுக்குக்
கொடுத்தருளுப்பட்ட     வாணனது      தஞ்சாக்கூரின்     வாவிவியிலிருக்கும்
மாதுபோல்வாளும்   ஒரு   செல்வனும்   உங்களைப்   போல்  அழகுபொருந்தி
யான்  நெஞ்சு  மிகவருந்த வெய்ய காட்டிடத்துப் போயினர்;  நீங்கள  கண்டீரோ,
சொல்வீரர்க என்றவாறு.

அகம் - நெஞ்சு.   போத - மிக.    வனப்பு - அழகு.    கானகம் - காட்டிடம்.
கற்பகாடவி - கற்பகக்காடு.   வானகம் - வானிடம். வானவன் - சேரன். நகுதல் -
ஒளிவிடல்.
(346)    
கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்:
கலந்துடன்  வருவோர் புலம்பல் தேற்றல் என்பது,  செவிலியிரங்கிப்  புலம்புதலை
எதிர்வந்தோர்தேற்றிக் கூறல்.
  யான்கண்ட அண்ணலு மெண்ணருங் காதலின் ஏகியவென்
மான்கண் டனகண் மயில்கண்ட மாதரு மாதருமம்
கான்கண்ட தண்ணளிச் சந்திர வாணன் தரியலர்போம்
கான்கண்ட மெய்குளி ரப்பொய்கை சூழ்தஞ்சை காண்பர்களே.