270
தஞ்சைவாணன் கோவை

 
(இ-ள்.) யான் காணப்பட்ட தலைவனும் என்னுடைய தலைவியாகிய மானை யுவமை
காண்டாற் போலும் கண்ணையுடைய இம்மயில்போன்றவள் கண்ட  எண்ணுதற்கரிய
காதலினால்   தலைவன்பின்  போகிய  மாதரும்  பெரிய  தருமத்தைக்    கண்ட
தண்ணளியையுடைய   சந்திரவாணன் தரியலர் செல்லும் காட்டைக் கண்ட உடம்பு
களிர இப்போது   பொய்கை   சூழ்ந்த   தஞ்சையைக்   காண்பார்கள் என்றவாறு.

     `யான்கண்ட  அண்ணலு  மென்மயில்  கண்ட  மாதரும்`   என்று   கூறவே,
எனக்கவள்  தோன்றாமல்  மறைந்து  நின்றாள்;  இவளும்  அத்தன்மையளாதலின்,
இவள்  அவளைக் கண்டதாகவும் தான் அவனைக் கண்டதாகவும் கூறினார்.  மயில்:
ஆகுபெயர்.   தண்ணளி - அன்பு. தலைவியை யான் கண்ட என்று கூறாது,  என்
மயில்   கண்ட   மாதர்   என்று   கூறியதென்னையெனின்,   தலைவன்  காணுந்
தன்மையளல்லது,  அயலார்   காணுந்   தன்மையளல்லள்   ஆதலால்  இவ்வாறு
கூறினார். என்னை,

 1`மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றல் மதி`
என்னுந் திருக்குறளினா னுணர்க.
(347)    
செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல்:
     செவிலி   புதல்வியைக்   காணாது  கவலைகூர்தல்  என்பது  செவிலி  தன்
புதல்வியைக் காணாது துன்பம் மிகுதல்.

 நாணினுந் தாரணி கற்புநன் றென்று நயந்துமுத்தம்
பூணினும் பாரமி தென்னுமென் பொன்னையிப் போதெனக்குச்
சேணினுஞ் சார்புகழ் வாணன்தென் மாறைமன் சேரலரைக்
காணினுங் காணவந் தோவரி தாலிந்தக் கானிடையே.

     (இ-ள்.) நாணைப்  பார்க்கவும்   முல்லைமாலை  யணிந்த   கற்பு    நன்ற
என்பதனை   விரும்பிச்   சென்றாள் ஆதலால், முத்தாரம் பூணினும்  பாரமென்று
சொல்லும்   மெல்லிய   இயல்பினையுடைய  என்   பொன்னை   எனக்கிப்போது,
சேணினுஞ்   சேர்ந்த புகழையுடைய வாணனாகிய தென்மாறை மன்னன் பகைவரை
இந்தக்   கானிடைக்   காணினும்,   காண அரிது, அந்தோ யான் என் செய்வேன்
என்றவாறு.

1. குறள். நலம்புனைந்துரைத்தல் - 9.