273
மீட்சி

 
தலைவி முன் செல்வோர் தம்மொடு தான்வரல்
பாங்கியர்க் குணர்த்தி விடுத்தல்:
 புனையல ரேதிலர் காதலர் தாயர் பொறாமையிற்போய்
இனைதுயர் யாதொன்று மின்றிவெங் காளிகந் தியானுமம்பொன்
வனைகழ லானும் வருவதெல் லாஞ்சென்ற வாணன்தஞ்சை
துனைவுட னேகுகின் றீர்சொல்லு வீரன் துணைவியர்க்கே.
(இ-ள்.) வாணனது     தஞ்சைக்கு     விரைவுடன்    செல்கின்றீர்,    புனைந்து
அலரைத்துற்றுகின்ற   அயலார்,  என்னிடத்துக்  காதலை  யுடையாராகிய  தாயர
் இவர்களது   பொறாமையினால்   போய் வருந்துந்துன்பம் ஒன்றுமின்றி வெவ்விய
காட்டை   நீங்கிப்போய்   மீண்டு   யானும்   அழகிய   பொன்னால்  வனைந்த
கழலையுடையானும்  வருகின்ற  செய்தியெல்லாஞ்  சென்ற  என் துணைவியர்க்குச்
சொல்லுவீர் என்றவாறு.

புனைதல் - இல்லதனை  யுண்டாக்கிக் கூறுதல். ஏதிலர் - அயலார். இனைதுயர் -
வருந்துயர். இகந்து - நீங்கி. துனைவு - விரைவு.

 1`கதழ்வுந் துனைவும் விரைவுப் பொருள்`
என்பதனாற் கண்டுகொள்க.
(351)    
முன்சென்றோர் பாங்கியர்க் குணர்த்தல்:
 போதலர்ந் தல்லை முனியுமெல் லோதிப் புனையிழைதன்
காத்லன் பின்வரக் கண்டனம் யாங்கண்டல் வேலிமுந்நீர்
மாதலந் தன்னிரு தோள்வைத்த வாணன்தென் மாறைவண்ணச்
சூதலந் தொல்கவிம் மித்திரன் மாமுலைத்தோகையரே.

(இ-ள்.)  தாழைக்காட்டை  வேலியாகவுடைய கடல் சூழ்ந்த பெரிய புவியைத்  தன்
இருதோளில்   வைத்த  வாணன்  தென்  மாறைநாட்டில் அழகுபொருந்திய  சூது
இடுக்கண்பட்டுச்    சுருங்கப்  பூரித்துத்   திரண்ட   பெரிய    முலையையுடைய
தோகைபோல்வீர்! போதுகள் மலர்ந்து இருளைச் சினக்கும மெல்லிய குழலினையும்
புனைந்த   பூணினையும்   உடையாள்   தன்  காதலன் பின்வர யாம்  கண்டனம்
என்றவாறு.

அல் - இருள்.  ஓதி - கூந்தல்.  மெல்லோதி,  புனையிழை: அன்மொழித்தொகை.
கண்டல் - தாழை.   புயவலியால்   குறும்   படக்கிப்   பூமியைக்    காத்தலான்,
`மாதலந்தன்னிரு தோள்வைத்த வாணன்` எனக் கூறினார்.  அலத்தல் - இடுக்கண்.

1, தொல். சொல். உரியியல் : 9.