|
|
| 1`அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்` |
எனவும், |
| 2`அற்றார்க்கும் அலந்தார்க்கும்` |
எனவும் பிறரும் கூறியவாற்றானுணர்க. விம்முதல் - பூரித்தல். |
(352) |
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குரைத்தல்: |
| வாளேய் விழிநின் மயிலனை யாள்தஞ்சை வாணன்வெற்பில் வேளே யனைய விடலைபின் னேசுர மீண்டினிநம் கேளேய்பதிவரு மென்னநல் லோர்சொல்லக் கேட்டனமிந் நாளே யனையநன் னாளுள வோசென்ற நாள்களிலே. |
(இ-ள்.) வாள்போன்ற விழியினையுடைய நின் மகளாகிய மயில் போன்றவள் தஞ்சைவாணன் வெற்பிடத்துக் காமனையொத்த விடலை பின்னே சுரம்போய் மீண்டு நம் சுற்றத்தாரிருக்கும் நகரின்கண்ணே வருமென்று நல்லோர் சொல்லக் கேட்டனம்; ஆதலின் இந் நாளைப்போன்ற நன்னாள் கழிந்த நாள்களிலே யுளவோ என்றவாறு.
|
வேள் - காமன். விடலை - பாலைநிலத் தலைவன். கேள் - சுற்றம். ஏகாரம் மூன்றும் ஈற்றசை. |
(353) |
நற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல்: |
| தென்மாறை நன்னகர் மன்னவன் வாணன் செழுந்தஞ்சைசூர் பொன்மா திரத்துப் புலனுணர் வீச்சுரம் போய்வரவோன் என்மானை யென்மனை யிற்றரு மோதன்னை யீன்றநற்றாய் தன்மா நகருய்க்கு மோசொல்லு வீரொன்று தானெனக்கே. |
(இ-ள்.) தென்மாறை நன்னகர்க்கு மன்னவனாகிய வாணனது செழுந்தஞ்சையைச் சூழ்ந்த அழகிய திக்கினுள்ளார் நினைக்கும் அறிவையெல்லாம் அறிவீர்! சுரம் போய் மீண்டுவருந் தலைவன் மானனையாளை என் மனையிலே தருமோ, தன்னையீன்ற நற்றாயிருக்கும் தன் பெரிய நகர்க்கே செலுத்துமோ, எனக்கு ஒன்று சொல்வீர் என்றவாறு. |
பொன் - அழகு. மாதிரம்: ஆகுபெயர். புலன் - அறிவு. உய்த்தல் - செலுத்தல். வேலன் - முருகுவேளடையாளமாய்க் கையிலே வேல்பிடித்துத் திரிபவன்; வெறியாட்டாளன். |
|
1. திருமுரு - 271. |
2. அப்பர். கோயிற் பெரிய திருத்தாண்டகம் - 2. |