|
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பிடத்திலிருக்குஞ் சுனையிற்பூத்த நிறத்தையுடைய கள்பொருந்திய கழுநீரைச் சூடிய குழலாய், எல்லாக்கேளிரும் மணப்பந்தரில் வந்து நின்று மணச்சடங்கு செய்ய, தலைவனூரில் மணவின்பத்தை யெய்தி அத்தன்மைத்தாகிய நட்பைப் பொருந்திய தலைவன் பின்னே நம் அன்னை போல்வாள் இன்று இம்மனையிடத்து இப்போது வருமெனச் சில தூதர் வந்து சொன்னார் என்றவாறு.
|
எனைக்கேளிரும் - எல்லாக்கேளிரும். அனைக்கேண்மை - தன்தைத்தாகிய வுறவு;
|
| 1`அனைநிலை வகையோ டாங்கெழு வகையால்` |
என்னுஞ் சூத்திரத்து, உரையாசிரியர் உரையானுணர்க. அண்ணல் -தலைவன். ஆக: பிரிவிலசைநிலை;
|
| 2`ஆக வாக லென்ப தென்னும் ஆவயின் மூன்றும் பிரிவி லசைநிலை`
|
என்னுஞ் சூத்திரத்தானுணர்க. 3`காரெதிர் கானம் பாடினேமாக` என்னும் உதாரணத்தானுமுணர்க. அன்னை - காதல் பற்றிவந்த சொல். கேழ் - நிறம். நனை - கள். இன்னே - இப்போதே. |
(357) |
தலைவன் பாங்கிக்கு யான்வரைந்தமை நுமர்க்கு இயம்புசென் றென்றல்: |
| கோபுரஞ் சோலை கொடிமதில் மாடங் குலாவிமையோர் மாபுரம் போலுந்தென் மாறை வரோதயன் வாணன்வெற்பில் நீபுரந் தேதந்த மாதையங் கியாம்வரை நீர்மைபொன்செய் நூபுரஞ் சூழடி யாய்சென்று கூறு நுமர்தமக்கே.
|
(இ-ள்.) பொன்னால் செய்த சிலம்பு சூழ்ந்த அடியினையுடையாய்! கோபுரமும் சோலையும் கொடியும் மதிலும் மாடமும் விளங்கப்பட்ட அமராவதியை யொக்கும் தென்மாறை நாட்டில் வரோதயனாகிய வாணன் வெற்பில் நீ பாதுகாத்துத் தந்த மாதை என்னூரில் வரைந்த நீர்மையை நுமர் தங்களுக்குச் சென்று சொல்வாய் என்றவாறு.
|
`கோபுரஞ் சொலை சொடிமதில் மாடம்` என்புழி, எண்ணும்மை தொக்கு நின்றன. குலவுதல் - விளங்குதல். இமையோர் மாபுரம் - அமராவதி. புரத்தல் - காத்தல். வரைநீர்மை: வினைத்தொகை. நூபுரம் - சிலம்பு. |
(358) |
|
1. தொல். பொருள். புறத்திணையியல் - 16. |
2. தொல். சொல். இடையியல் - 32; நச்சினார்க்கினியம். |
3. புறம் - 144. |