தஞ்சைவாணன் கோவை
278

 
பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தல்:
 அன்னைக் கியம்பின னாண்டகை யான்முன் னறிந்துதென்னன்
தன்னைப் பணிந்துகுற்றேவல்செய் யாது சமர்க்கெழுந்த
மன்னைப் புறங்கண்ட வாணன்தென் மாறை வரையிலொங்கள்
பொன்னைப் புணர்த்துநுங் கேள்முன்னர்நீபொன் புனைந்ததுவே.

(இ-ள்.)  ஆண்டகையே! பாண்டியனைப் பணிந்து குற்றேவற் றொழின்  முறைமை
செய்யாது  போர்க்கு  எழுந்த  மன்னைப்  புறங்  கண்ட  வாணன்  தென்மாறை
வரையில்  எங்கள்  பொன்போன்ற  வளைக்  கூடி  நும் சுற்றத்தார் முன்னம்  நீ
திருப்பூட்டியது  யான்  முன்னை  யறிந்து அன்னைக்கு இயம்பினேன் என்றவாறு.

ஆண்டகை: அண்மைவிளி.  தென்னன் - பாண்டியன். குற்றேவல் - சிற்றாளாய்ச்
செய்யுமேவல். பொன்: ஆகுபெயர். பொன் புனைதல் - திருப்பூட்டுதல்.

`மணனயர்  வேட்கையி  னாற்றாய்  செவிலியை  வினாதல்`  ஒன்றும  வினாதல்.
`வரைந்தமை  பாங்கி  செவிலிக்குணர்த்`தலும்,  `வரைந்தமை  செவிலி  நற்றாய்க்
குணர்த்த`லும்,  `பாங்கி  தானது  முன்னேசாற்றியதுரைத்த`லும் மூன்றுஞ் செப்பல்.
`தலைமக னுமர்க்கியம்பு` `சென்றென்றல்` ஒன்றும் மேவுதல்.
(359)    
தன்மனை வரைதல் முற்றிற்று.