|
|
| தலைமகள் தன் செலவு ஈன்றாட்குணர்த்தி விடுத்தல்: வாயார நுங்களை வாழ்த்துகின் றேன்தஞ்சை வாணன்வெற்பில் சாயாத மாதவத் தாழ்சடை யீரன்பர் தம்மொடின்றியான் சேயாறு தேர்மிசைச் செல்வதெல் லாமெங்கள் சேரியிற்சென்றி யாயா கியகொடி யாட்கினி தாக வியம்புமினே. |
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பில் கேடில்லாத மாதவத்தினாற் கொண்ட தாழ்ந்த சடையுடைய அந்தணீர், நுங்களை வாய்நிறைய வாழ்த்துகின்றேன்; தலைவர் தம்முடனே இன்று யான் சேண்வழியில் தேரின்மீது செல்வதெல்லாம் எங்களூரின்கண் சென்று தாயாகிய கொடியாட்கு இப்போதே இன்பாகச் சொல்லும் என்றவாறு.
|
சாயாத - கேடில்லாத. சேயாறு - சேண்வழி. `இனிதாக` என்பது குறிப்பாற் கூறிய வெறுப்புமொழி. |
(361) |
நற்றாய்க்கு அந்தணர் மொழிதல்: |
| மருள்கொண்ட சிந்தை மலைகிழ வோய்தஞ்சை வாணன்வெற்பில் வெருள்கொண்ட மென்பிணை வென்றகண் ணாள்வென்றி வேல்வலங்கை அருள்கொண்ட நெஞ்சினோ ரண்ணல்பின் னேயகன் றாளகல்வான் இருள்கொண்ட கொண்டல்செல் லாவரை சூழு மிருஞ்சுரத்தே. |
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பினிடத்து மகளைக் காணோம் என்ற மயக்கங்கொண்ட சிந்தையினையுடைய மலைக்கரசியே! வெருட்சி கொண்ட மென் பிணைமானை வென்ற கண்ணாளாகிய நின்மகள் வெற்றிவேலை வலங்கையினும் அருளை நெஞ்சினும் கொண்ட ஒரு வேந்தன்பின்னே, அகன்ற வானிடத்துச சூல்கொண்ட மேகம் ஒருகாலுஞ் சென்றறியாத மூங்கில்சூழ்ந்த பெரிய காட்டிடத்தே யகன்றாள் என்றவாறு.
|
மருள் - மயக்கம். வெருள் - வெருட்சி. பிணை - பெண்மான். `வென்றி வேல்வலங்கை, அருள்கொண்ட நெஞ்சில்` என்புழி, உம்மைத்தொகை. வென்றிவேல் வலங்கையீனும், அருள் நெஞ்சினும் என்றது, மாற்றார் வணங்காக்கால் வேல் செலுத்தலும், வணங்குங்கால் அருள் செலுத்தலும் கருதியென்க. |
(362) |
நற்றாய றத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல். |
நற்றாய் அறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவி கண்டு தமலைவற்கு உணர்த்தல் என்பது, அந்தணர் மொழிய அறிந்த நற்றாய் குறிப்பான் அறத்தொடு நிற்றலின் தமர்சினந்து குழாங் கொண்டுபின் சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல். |