287
வரைவு கடாதல்

 
பூவை போல்  வாளும்  நீயும்கூடி, தெரிந் தெடுத்த பொன்போன்ற இதழையுடைய
கொன்றைப்பூவைத்  தரித்த  வேணியனாகிய சிவனும் தேவியாகிய உமையும்போல
எஞ்ஞான்றும் பிரியாதிருக்கப் பெறுவீர் என்றவாறு.

     தெரி யாடகம் - பொன்கறிற் றெரிந்தெடுத்த பொன். கொன்றை
வேணி - சிவன். தேவி - உமை. ஆல்: அசை. புரி - நரம்பு, யாழும் பூவையும்
ஆகுபெயர். கேழ் - நிறம். வரிதல் - கட்டுதல்.
(368)    
பாங்கி தலைவியை வரையுநாளளவும்
வருந்தா திருந்தமை யுரையாயென்றல்:
 1கோங்கநன் மாமுகைக் கொங்கைநல் லாய்மணங் கூடுமெல்லை
யாங்கன மாற்றி யிருந்தனை நியிப மாசயிலம்
தாங்கன மாறத் தலம்புனை வாணன் தமிழ்த்தஞ்சைவாழ்
பூங்கன மார்குழ லாரலர் மாலைப் பொறைசுமந்தே.
(இ-ள்.) கோங்கினது  நல்ல பெரிய முகைபோன்ற கொங்கையை யுடைய  நல்லாய்!
நீ  மணங்கூடுமளவும்  திக்கயமும்  பெரிய   குலவரையும்   பூமி   பாரமெடுத்த
இளைப்பாற,  அப்  பாரத்தைத்  தரித்த  வாணன்  தமிழ்த்  தஞ்சையில் வாழும்,
பூவைத் தரித்த முகில்போன்ற குழலார் தூற்றப்பட்ட அலராற்கட்டிய  மாலையினது பாரத்தைச் சுமந்து எவ்வணம் ஆற்றியிருந்தனை என்றவாறு.
இபம் - திக்கயம்.    மாசயிலம் - குலவரை.    தலம் - பூமி.    கனம் - முகில்;
இதற்குப் பாரமாகிய குழலார் என்று பொருள் கூறுவாரும் உளர்.
(369)    
பெருமகளுரைத்தல்:
     பெருமகள்   உரைத்தல்   என்பது,   தலைவி தான் வருந்தாதிருந்த காரணம்
பாங்கிக்கு உரைத்தல்.
 மைதோய்ந் தலர்ந்த மலர்த்தடஞ் சூழ்தஞ்சை வாணனொன்னார்
மெய்தோய்ந்த செந்நிற வேல்விழி யாய்துயர் வெள்ளம்வெற்பர்
கைதோய்ந் தனிப்பவ சோகத்த வாய்நிறங் கால்வனைவாய்
நெய்தோய்ந் தனதழை யேபுணை யாக்கொண்டு நீந்தினனே.

     பெருமகள்   உரைத்தல்  என்பது, தலைவி  தான் வருந்தாதிருந்த காரணம்
பாங்கிக்கு உரைத்தல்.

ஆறலைத்தல் - வரிபறித்தல். நூறல் - கொல்லுதல். `நுமரேல் அஞ்சவல்` என்றது.
நுமரெதிர்ந்துழி   அவரைக்  கொலை செய்ய வேண்டும்! செய்துழி நீ துயருழத்தி:
ஆதலால்,    `அஞ்சுவல்`   என்றான்.   தாறு - குலை.   தண்டலை - சோலை.
நூழிலாட்டு என்பது, ஒருவன் பலரைக் கொன்று குவித்தல்; என்னை.

1. முல்லைப் பாட்டு - 29.