தஞ்சைவாணன் கோவை
288

 
மைதோய்ந்து   அலர்ந்த  மலர் - நீலமலர்.  தடம் - வாவி. தோய்ந்து -தொட்டு.
அளிப்ப - கொடுப்ப. நெய் - புழுகு. புணை - தெப்பம்.
(370)    
தலைவனைப் பாங்கி வரையுநா ளளவும்
நிலைபெற வாற்றிய நிலைமை வினாதல்:
 வரையுமிந் நாளள வெவ்ாறு நீரெம் மடந்தைமுகை
புரையுமென் கொங்கை பிரிந்திருந் தீர்முன் பொருப்பெடுத்தே
நிரையுமிஞ் ஞாலமுங் காத்தருள் தானன் பதாகையினீள்
திரையுங் குயிலும் விடாதெழு மோசை செவிமடுத்தே.
(371)    
(இது பிறசெய்யுட் கவி.)
மன்றல்மனைவரு செவிலிக் கிகுளை யன்புறவுணர்த்தல்:
மன்றல்  மனைவரு  செவிலிக்கு  இகுளை அன்புற உணர்த்தல் என்பது, கலியாண
மனையில்வந்த  செவிலிக்கு  இகுளை  இருவரது  இன்பும்  உறவும்   உணர்த்தல்.

  வளங்கொண்ட தஞ்சை வரோதயன் வாணன்தென் மாறையன்னாள்
இளங்கொங்கை கொண்டுழு தீரங்கொண் மார்பின்முத் தேற்பவித்தி
விளங்கொண் பிறைநுதல் வேர்தரும் போகம் விளைத்தன்புசேர்
உளங்கொண் டருத்துத லாலன்னை யூர னுவப்புறுமே.

(இ-ள்.) அன்னாய்!   வளமைகொண்ட   தஞ்சையில்   வரோதயனான   வாணன்
தென்மாறை   போன்ற  தலைவி  தன்  இளங்  கொங்கையைக்  கொண்டு உழுது
ஈரங்கொண்ட   மார்பிடத்து   முத்து   மாலையினது  முத்தைப்பொருந்த  வித்தி
விளங்கும் ஒள்ளிய பிறை போன்ற நுதலின் வேரைத்தரும் போகத்தை  விளைத்து
அன்புசேர்  உள்ளங்கொண்டு  நுகர் வித்தலான் ஊரன் மகிழ்ச்சியுறும்  என்றவாறு.

ஈரம் - அன்பு. அருத்துதல் - நுகர்வித்தல். உவப்பு - மகிழ்ச்சி. வேர் - வியர்வை.
(372)    
  பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குரைத்தல்:
சினவேய் சுளியுங் களிற்றண்ணல் வாணன்தென் மாறையினம்
மனவே யகலல்குல் வல்லியன் னாள்மறை யோர்முதலாம்
சனவே தனைகெடத் தானங்க ளீதலிற் சாலவுநன்
றெனவே நடக்கின்ற தாலன்னை நாடொறும் இல்லறமே.

(இ-ள்.) அன்னை!   தன்   நிழலைச்   சுளித்துப்பாயுஞ் சினம் பொருந்தியகளிற்று
வேந்தனாகிய வாணன் தென்மாறை நாட்டில் நம்முடைய பட்டிகை சூழ்ந்த அகன்ற
அல்குலையுடைய வல்லி போல்வாள், மறையவர்