|
|
முதலாகிய சனங்களது வேதனை கெடத் தானங்கள் ஈதலின் மிகவும் நன்றென இல்வாழ்க்கை நாடொறும் நடக்கின்றது என்றவாறு.
|
`சுளியுஞ்சினவேய்` என மாறுக. மனவு - இடையிற்கட்டும் பட்டிகை. `மறையோர் முதலாம்` எனவே, நாவலர் மிடியர் பிணியாளரையும் கொளக். தானங்கள் - அன்னம் ஆடை நிதி முதலியன. |
(373) |
மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியல் நற்றாய்க்குணர்த்தல்: |
| ஒன்றோ தமக்குவந் தெய்திய நன்மை உடன்றெதிர்ந்தார் வன்றோ லமர்வென்ற வாட்படை வாணன்தென் மாறையில்வாழ் நின்றோகை கற்பி னிலைமையெண் ணாதெதிர் நின்றுவெந்நிட் டன்றோ வடக்கிருந் தாள்மடப் பாவை யருந்ததியே.
|
(இ-ள்.)கோபித்து எதிர்ந்தார் வலிய யானைப் போரை வென்ற வாட்படையையுடைய வாணன் தென்மாறையில் வாழப்பட்ட நின் தோகைபோலவாளது கற்பினிலைமையை யெண்ணாது, மடப்பாவை போன்ற அருந்ததியானவள் ஒப்பென்று எதிர் நின்று தோல்வியையடைந்து புறங்கொடுத்ததனாலன்றோ தவஞ் செய்வதற்கு வடக்கிருந்தாள்; ஆதலால், மகளால் நமக்கு எய்திய நன்மை ஒன்றோ, பல என்றவாறு.
|
உடன்று - கோபித்து. தோல் - யானை. வெந்நிட்டு - புறங்கொடுத்து; தோல்வி யடைந்தோர் தவஞ்செய்தற்க வடக்கிருத்தல் இயல்பென்றுணர்க. கவுசிகன் வசிட்டனோடு எதிர்த்துந் தோல்வியடைந்து வடதிசையிற் றவஞ் செய்ததனாலும் உணர்க. அன்னை யென்பது முன்னிலையெச்சம். |
(374) |
நன்மனை வாழ்க்கைத் தன்மை யுணர்த்தல்: |
நன்மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தல் என்பது, செவிலி நற்றாய்க்குத் தலைமகள் மனைவாழ்க்கைத் தன்மையை யுணர்த்தல்.
|
| விண்மே லமரர் விரும்பம ராவதி வெள்ளமுந்நீர் மண்மே லடைந்தன்ன வாழ்க்கைய தானது வாணன்தஞ்சை பண்மே லளிமுரல் குங்குமத் தோளவர் பங்கயம்போல் கண்மே லருள்பெற்று வாழ்மட மாதர் கடிமனையே.
|
(இ-ள்.) வாணன் தஞ்சை மாநகரின் மேலே வண்டுபண்ணை முரலப்பட்ட குங்குமமாலை யணிந்த தோளையுடையவரது பங்கயம்போன்ற கண்ணினிடத்து அருளைப் பெற்று வாழப்பட்ட மடமாதர் மணமனையானது |