கட
29

கைக்கிளை

 

கேற்றலின். ஆயின்,  இலக்கணமென்று இலக்கணத்திற் கூறியவாறென்னையெனின்,
அந்நாடகத்    தமிழ்க்கே   இலக்கணங்   கூறினார்    என்க.  இவையெல்லாம்
அகலவுரைப்பாற்படும். (1)
 

ஐயம்:
 

      ஐயம் என்பது  கண்ணுற்ற தலைமகன் கொடி அல்லன் பெய்ணென்றறிந்து,
இங்ஙனங்    காட்சியிற்சிறந்து     தோன்றிய    இவள்  தெய்வப்  பெண்களின
எத்தெய்வப்பெண்ணோ என்று ஐயப்படுதல் கூறல்.
 
பாரணங் கோதிருப் பாற்கடல் ஈன்றபங் கேருகத்தின்
ஓரணங் கோவெற் புறையணங் கோஉயர் பாவலர்க்கு
வாரணங் கோடி தருந்தஞ்சை வாணன்தென் மாறைவையை
நீரணங் கோநெஞ்ச மேதினி யேஇங்கு நின்றவரே.
 
      (இ-ள்.)பாரினிடத்துப் பொழிலின்   மேலிருந்து   புவியினுள்ளோர் சிறப்புச்
செய்ய அச்சிறப்பைக் கொள்ளுந் தெய்வப்  பெண்ணோ!  திருப்பாற்  கடல்பெற்ற
பங்கேருகத்துக்கண் இருக்கும்  ஒப்பில்லாத தெய்வப்பெண்ணோ! வரையரமகளோ!
உயர்ந்த  பாவலர்க்குக்  கோடி  யானையைக்  கொடுக்கும்   தஞ்சை  வாணனது
தென்மாறை நாட்டகத்து  வரும்  வையையாற்றின்கண்  தோன்றிய    நீரரமகளோ நெஞ்சமே, தனியே இங்கு நின்றவர் யாரோவென்று அறியப்படாது.
 
     இதனுள்  ஓகாரங்கள்  ஐயப்பொருளவென்று  உணர்க.  நெஞ்சமே, தனியே
யிங்கு  நின்றவர்  யார்?  என, நெஞ்சோடு வினாதற் பொருண்மை யென்று வினா
ஓகாரம் என்பாரும்,  அவரோ இவரோ  என்று  ஆராய்தற்   பொருண்மைக்கண
்வந்ததென்று  தெரிநிலை  ஓகாரம்  என்பாரும்  உளராலோவெனின்,   இக்கிளவி
ஐயமாதலால் ஐயப்பொருண்மையை விளக்குவது இவ்வோகாரங்கள்; அல்லவெனின்,
ஐயப்பொருண்மையை   யுணர்த்துவது  வேறின்மையால்,  அவர்  கூறிய   வினா
ஓகாரமும், தெரிநிலை ஓகாரமும் அப்பொருண்மை யறிக.
 
1`பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப வோகா ரம்மே`
 
எனச்  சூத்திரத்துள்  ஐய  ஓகாரங்  கொண்டிலரால்   எனின்,   இச்சூத்திரத்திற்
கொண்டிலர்; எழுத்ததிகாரத்து உயிர் மயங்கியலில் ஓகார வீற்றுப் பதமுடிப்புழி,
 

     1. தொல். சொல். இடையியல் - 8.