|
|
விண்ணுலகில் அமரர் விரும்பும் அமராவதி, வெள்ளமாகிய கடல் சூழ்ந்த மண்ணுலகின்மேல் வந்தடைந்தாலொத்த வாழ்க்கையதானது என்றவாறு.
|
அமராவதி - இந்திரபுரம். முந்நீர் - கடல். `அளிபண்` என மாறுக. முரலுதல் - ஒலித்தல். கடி - மணம். |
(375) |
செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையு மறிவித்தல்: |
| நனையகத் தல்கிய நாண்மல ரோதி நயந்துறையும் மனையகத் தல்லிடை வைகுத லால்தஞ்சை வாணனொன்னார் வினையகத் தல்குதல் செல்லுவ ரேனுமவ் வேந்தர்பொற்றேர் முனையகத் தல்கல்செல்லாதொரு நாளும் முகிழ்நகையே.
|
(இ-ள்.) முகிழ் நகையே, கள் உள்ளே தங்கிய முறுக்கவிழ் மலரை யணிந்த கூந்தலாள் விரும்பி யுறையும் மனையகத்து இராக் காலத்தில் தங்குதலான, தஞ்சைவாணன் ஒன்னார் போர்த் தொழிலிடத்துத் தங்குதலாற் செல்லுவரேனும், அத்தலைவர் போற்றேர ஒருநாளும் படையகத்துத் தங்குதல் செல்லாது என்றவாறு.
|
எனவே, இரவின்கண் மனையிடத்துத் தங்கதலல்லது, மற்றோரிடத்துத் தங்குதலில்லை யென்று கூறியவாறாயிற்று.
|
நனை - கள். அகம் - உள். அல்குதல் - தங்குதல். நாண்மலரோதி : ஆகுபெயர். நயந்து - விரும்பி. அல் - இரவு. வைகுதல் - தங்குதல். முனை - படை. `செல்லுவரேனும்` என்னும் உம்மையால், செல்லார் என்பது தோன்றி நின்றது. மலர்நகைமடவார்க்கியல்பு என்றதனால் `முகிழ்நகை` எனக் கூறினார். முன்னம் - `வறிதுநகை தோற்றற்`கும் (செய் - 15) இவ்வாறே முகிழ்நகை தோன்றியதென்று உணர்க.
|
`தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்` கிழவோன் மகிழ்ச்சி, `தலைவனைப் பாங்கி வாழ்த்தல்` முதல், `செவிலிக்கில் வாழ்க்கை நன்றறைதல்` ஈறாகிய ஆறனுள், `பெருமகளுரைத்தல்` கிழத்திமகிழ்ச்சி; அல்லன ஐந்தும் பாங்கி மகிழ்ச்சி; `செவிலி நற்றாய்க்குத் தலைமகள் கற்பியலுரைத்தல்` மூன்றும் செவிலி மகிழ்ச்சியெனக் கொள்க. |
(376) |
செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையு மறிவித்தல்: |
| மருள்கொண்ட சிந்தை மலைகிழ வோய்தஞ்சை வாணன்வெற்பில் வெருள்கொண்ட மென்பிணை வென்றகண் ணாள்வென்றி வேல்வலங்கை அருள்கொண்ட நெஞ்சினோ ரண்ணல்பின் னேயகன் றாளகல்வான் இருள்கொண்ட கொண்டல்செல் லாவரை சூழு மிருஞ்சுரத்தே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பினிடத்து மகளைக் காணோம் என்ற மயக்கங்கொண்ட சிந்தையினையுடைய மலைக்கரசியே! வெருட்சி கொண்ட மென் பிணைமானை வென்ற கண்ணாளாகிய நின்மகள் வெற்றிவேலை வலங்கையினும் அருளை நெஞ்சினும் கொண்ட ஒரு வேந்தன்பின்னே, அகன்ற வானிடத்துச் சூல்கொண்ட மேகம் ஒருகாலுஞ் சென்றறியாத மூங்கில்சூழ்ந்த பெரிய காட்டிடத்தே யகன்றாள் என்றவாறு.
|
மருள் - மயக்கம். வெருள் - வெருட்சி. பிணை - பெண்மான். `வென்றி வேல்வலங்கை, அருள்கொண்ட நெஞ்சில்` என்புழி, உம்மைத்தொகை. வென்றிவேல் வலங்கையீனும், அருள் நெஞ்சினும் என்றது, மாற்றார் வணங்காக்கால் வேல் செலுத்தலும், வணங்குங்கால் அருள் செலுத்தலும் கருதியென்க. |
(362) |
நற்றாய றத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல். |
நற்றாய் அறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவி கண்டு தமலைவற்கு உணர்த்தல் என்பது, அந்தணர் மொழிய அறிந்த நற்றாய் குறிப்பான் அறத்தொடு நிற்றலின் தமர்சினந்து குழாங் கொண்டுபின் சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல். |
இல்வாழ்க்கை முற்றிற்று. |