கட 291 | 28. பரத்தையிற் பிரிவு | | | | | | | அஃதாவது தலைமகள் பரத்தைமேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிற் போதல். பரத்தையிற் பிரிவு என்றோதவே,
| | 1`பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்`
| என்பதனால், தலைவன் அறிவிலனாம், தலைவியிடத்து அன்பும் இலனாம், பெருமையும் இலனாம்; பட்டியும் ஆம் எனின், அற்றன்று. அரசுரிமைய னாதலின், அவ்வரசுரிமைக்குப் பரத்தையரினும் வரைதற்குரியராய்த் தொன்றுதொட்ட நடக்கும் முறைமையராயும், வரையாத வுரிமையராய்ச் சேரியின்கண் உறைவாரும் ஆய இருவரும் பிறந்த ஞான்றுதொட்டு இவர்க்கென வரித்திருக்கப்படுதலானும், அவரை நீக்குதல் தகுதியன்மையானும், பரத்தையிற் பிரிதல் கற்றமன்றெனக் கொள்க. அன்றியும், காலைக்கடன் கழித்தலும், உலகத்திலிருந்து நாடுகாவற்றொழில் செலுத்தலும், விருந்துடன் அடிசில் கைதொடலும், நாவலரோடு கல்வி பயிறலும், ஆடல் பாடல்களிற் களித்தலும், மடவாரோடு கூடலும், துயிறலும், துயிலுணர்ந்து தேவர்ப்பராவலும் ஆகிய காலவரையறை யெட்டினுள், ஆடல், பாடல் ஒன்றாதலானும், அதற்குரியர் பரத்தைய ராதலானும் அதற்குரிய காலத்தில் அவரிடத்தில் மனம்செல்லுதல் இயல்பாதலானும், பரத்தையிற் பிரிதலாற் குற்றமின்றெனக் கொள்க. ஆயின், பரத்தையர் சேரியில் செல்லுமா றென்னை யெனின், அவர் பலரோடும் விளையாடற் பொருட்டும் அவருட் புணர்தற்குரியரைப் புணர்தற் பொருட்டும் பரத்தையர் சேரியிற் செல்லுமென்று உணர்க.
| காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக் கேது விதாமவ் விறைவிக் கென்றல்: | | மாறையர் காவலன் வாணன்தென் தஞ்சையில் வாணுதற்கிவ் வாறையர் காரண மாகுமென் றேகொங்கை யானையுடன் சாறையர் வீதிய ரிப்பறை யார்ப்பத் தயங்குகுழல் சூறையர் சூறைகொள் வான்வய லூரனைச் சூழ்ந்தனரே
| (இ-ள்.) விளங்கும் குழலையுடைய பரத்தையர் அறிவைக் கொள்ளைகொள்ளும் பொருட்டாகக் கொங்கையாகிய யானையுடன் திருவிழாச் செய்யும் வீதியில் வண்டாகிய பறவைகள் ஆரவாரிக்க வயலூரனைச் சூழ்ந்தனர்; ஆதலால், மாறையர் காவலனாகிய வாணன் |
| 1. குறள் - வரைவின் மகளிர் - 5. | | |
|
|