கட
தஞ்சைவாணன் கோவை
292

 
தென் தஞ்சையிலிருக்கும் வாணுதற்கு இம்முறைமை புலவி செய்தற்குக் காரணமாம்
என்றது.

இவ்வாறு - இம்முறைமை.   அயர்தல் - இரண்டும்  செய்தல்.      சாறு - விழா.
அரி - வண்டு. சூறையர் - பரத்தையர். சூறை - கொள்ளளை.  புலவியும் அறிவும்
அவாய்நிலையான் வந்தன.
(377)    
தனித்துழி யிறைவி துனித்தழு திரங்கல்:
  வன்போ தணிதொங்கல் வாணன்தென் மாறை மகிழ்நர்நம்மேல்
அன்போடு நன்னெஞ் சறிவறை போக அழலுள்வெந்த
பொன்போ னிறங்கொண் டிரவுங் கண்ணீரும் புலர்வதுபார்த்
தென்போ லெவரிங்ங னேயிமை யாம லிருப்பவரே.

(இ-ள்.) போதுகளாற்  கட்டிய  மாலை யணிந்த வாணன் தென்மாறையி  லிருக்கும்
வன்மையாகிய  மகிழ்நர்  நம்மேல்  வைத்த  அன்புடனே  அவ்வன்பு  இருக்கும்
நெஞ்சறிவு கீழ்போக அழலுள் வெந்த பொன்போன்ற நிறத்தைக் கொண்டு இரவும்
கண்ணீரும் எப்போது  புலருமென்று  புலர்வதுபார்த்து,  இவ்விடத்தில் என்னைப்
போல் உறக்கமின்றி இமையாம லிருப்பவர் யார் என்றவாறு.

`தொங்கலணி` எனவும்,  `வன்மகிழ்நர்`  எனவும்  `இங்ஙனென் போல்`   எனவும்
இயையும். தொங்கல் - மாலை.  மகிழ்நர் - கணவர்.  அறைபோதல் - கீழ்போதல்.
அழல் - நெருப்பு.
(378)    
ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்:
ஈங்கு இது என்னெனப் பாங்கி வினாதல்  என்பது,  மற்றைநாட் காலையில் வந்த
பாங்கி தலைவியை நோக்கி நீ அழுது  கொண்டிருத்தற்குக் காரணம் என்னென்று
வினாதல்.

 எம்மா திரமும் புரவலர்த் தேடி யிரந்துழல்வோர்
தம்மா துயரந் தணித்தருள் வாணன் தமிழ்த்தஞ்சைவாழ்
நம்மாவி யன்னவர் நாடொறு நாடொறு நல்கவுநீ
விம்மா வருந்துவ தென்பரிந் தாரின் விளங்கிழையே.

(இ-ள்.) விளங்கியாழ் எத் திக்கினுங்கொடுப்போரைத்  தேடி யிரந்து  வருந்துவோர்
தம்முடைய பெரிய  துயரைத் தவிர்த்தருளப் பட்ட  வாணன் தமிழ்த்  தஞ்சையில்
வாழும்  நமது  ஆவி போன்றவர்  நாடோறும் நாடோறும்  இன்பமளிக்கவும்  நீ
விம்முதலுற்றுப் பிரிந்தாரைப்போல் வருந்துவது என் என்றவாறு.

    மாதிரம் - திக்கு.   புரவலர் - கொடுப்போர்.   உழல்வோர் - வருந்துவோர்.
தணித்தல் - ஆற்றல். நல்கல் - அளித்தல். விம்மா என்பது வினையெச்சம். இன் :
உவமவுருபு.