கட
293
வரைவு கடாதல்

 
எடுத்துக்  கோடற்கண்ணே,  அகப்பொருள்  என்பதற்கு  இன்பப் பொருள் என்ற
பொருள்  கூறியவர்,   இவ்வாறு   துன்பமுறுதலைக்  கூறியது  என்னையெனின்,
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பன இன்பத்திற்கு உறுப்பாகலின்,
இவ்வைந்தினில்  ஒன்று  நீங்கினும்  அவ்வின்பத்திற்கு   உறுப்புக்    குறையாம்;
அஃதென்னையெனின்,   புணர்தலே  இன்பமென்றும்  ஏனைய   துன்பமென்றும்
கூறுகின்றுழி, பிரியாது புணர்ந்துழி வெறுப்படையும், பிரிந்துழித் துன்பமுற்றிலரேல்
அவர்   அறிவிலராம்.  இருத்தலும ் ஊடலும்  இவ்வாறே  கொள்க.   ஆதலால்,
துன்பமுறா விடின் இன்பக் குறைபாடே யெனக் கொள்க.
(379)    
இறைமகன் புறத்தொழுக் கிறைமக ளுணர்த்தல்:
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகள் உணர்த்தல் என்பது, தலைவன் தன்னிடத்து
ஒழுகும்  ஒழுக்கம்   இன்ற  பரத்தையரிடத்து   ஒழுகுகின்றானென்று   தலைவி
பாங்கிக்குக் கூறல்.

`புறத்தொழுக்கு`  என்பதற்குப்  பொருள்  பரத்தையரிடத்து  ஒழுகும்   ஒழுக்கம்
என்று  கொண்டவாறு  என்னையெனின்,  வடநூலார்  புறத்தைப்  பரம்   என்று
கூறுவாராதலால்,  பரத்தையர்  என்னுஞ்   சொற்குப்   புறமுடையவர்   என்னும்
பொருள்கூறி  நின்றவாறு  உணர்க.  புறமுடையவர்  என்பது    என்னையெனின்,
இவரின்பம்  இன்பமன்றென்று  தெய்வப்புலமைத்  திருவள்ளுவனார்,   `வரைவின்
மகளிர்`  என்னும்  அதிகாரத்தால்  இன்பத்திற்குப்  புறம்  இவரின்பம்    என்று
கூறியவாற்றானுணர்க.

  1`இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு`
     என்பதனானும் உணர்க.

  தாராக நல்கினர் காரிகை யாய்தஞ்சை வாணன்தன்னைச்
சேரா தவரென்னத் தீவினை யேனையச் செங்கண்வன்கட்
காரா கழனிக் கரும்பினஞ் சாயக் கதழ்ந்துசெந்நெல்
ஆரா தயலிற்பைஞ் சாயாரு மூரர் அயலவர்க்கே.

(இ-ள்.) அழகையுடையாய்! தஞ்சை வாணனைச் சேராதவர் போலத் தீவினையுடைய
யான் வருந்தச்,  சிவந்த  கண்ணையும்  தறு  கண்மையையும்  உடைய   எருமை
கழனியிடத்துக் கரும்புக்கூட்டம் சாய மிதித்து,  விரைந்து போய்ச் செந்நெல்லையும்
ஆராது,    வயல்வரம்பு   கடந்து   அயலிலிருக்கும்   கோரையை    யருந்தும்
ஊரையுடையவர்  அயலாராகிய    பரத்தையர்க்குத்    தார்பொருந்திய    தமது
மார்பைக் கொடுத்தனர் என்றவாறு.


1. குறள். வரைவின்மகளிர் - 10.