|
|
எனவே, கரும்புபோன்ற கலக்கிழத்தியும் செந்நெல் போன்ற தானும் வருந்து மனத்தி லென்னாது வரம்புகடந்து அயலிலிருக்கம் கோரைபோன்ற பரத்தையரைக் கூடினனென உள்ளுறையுவமங் கொள்ளக் கிடந்தவாறு காண்க. தார் - மாலை. ஆகம் - மார்பு. வன்கண் - தறுகண்மை. காரா - எருமை: |
| 1`பெற்றமு மெருமையு மரையு மாவே` |
என்பதனானுணர்க. கதழ்ந்து - விரைந்து. பைஞ்சாய் - கோரை. |
(380) |
தலைவியைப் பாங்கி கழறல்: |
| புனையலங் காரநங் கற்பியல் போற்றியும் போற்றருஞ்சீர் மனையறம் பாலித்தும் வாழ்வதால் லாற்றஞ்சை வாணனன்னா டனையவண் டார்குழ லாரணங் கேநமக் கன்பரிந்நாள் இனையரென் றார்வமில் லாவுரை யாட லியல்பல்லவே. |
(இ-ள்.) தஞ்சைவாணன் நன்னாடு போன்ற வண்டார்ந்த குழலையுடைய ஆரணங்கு போல்வாய், அலங்கரிக்கும் அலங்காரம் நம் கற்பிலக்கணமே யென்று கற்பிலக்கணத்தை வழுவாமற் காத்தும், துதித்தற்கரிதாகிய சிறப்பையுடைய இல்லறத்தை யுண்டாக்கியும் நாம் வாழ்வதேயல்லது இப்போது நம்மிடத் தன்பையுடையவர் இத்தன்மையரென்று விருப்பமில்லாததாக அவர் புறத்தொழுக்கைக் கூறுதல் நமக்கு முறைமையன்று என்றவாறு. |
புனைதல் - அலங்கரித்தல். போற்றல் - காத்தல். இயல் - இலக்கணம். மனையறம் - இல்லறம். இனையர் - இத்தன்மையர். ஆர்வம் - விருப்பம். |
| 2`அன்பீனு மார்வ முடைமை` |
என்பதனாற் கொள்க. |
(381) |
தலைவி செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி யுழையர்கண் டழுங்கிக் கூறல்: |
செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறல் என்பது, தலைவி பூத்தகாலை மூன்றாநாள் போக்கி நாலாநாள் நீராடியபின் செம்பூச்சூடிச் செவ்வாடை யுடுத்துச் செஞ்சாந்துபூசிச் சேடியை விடுக்கப் பரத்தையர் சேரியிலிருக்குங்கால் அவ்வலங்காரத்தை அயல்மனையில் உள்ளார் கண்டு இரங்கிக் கூறல். |
|
1. தொல். பொருள். மரபியல் - 60. 2. குறள். அன்புடைமை - 4. |